உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடை இங்கே இருக்கு சாவி எங்கே இருக்கு

கடை இங்கே இருக்கு சாவி எங்கே இருக்கு

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் ரேஷன் கடைக்கான கட்டடம் கட்டி பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் பழைய அங்கன்வாடி மற்றும் நாடக மேடை என அலைக் கழிக்கப்படுகின்றனர்.இங்கு 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை சிதிலமடையவே இடித்துவிட்டு ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சி துறை சார்பில் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகிறது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால் பழைய அங்கன்வாடி, நாடக மேடை உள்ளிட்ட இடங்களில் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர்.கார்டுதாரர்கள் கூறியதாவது: பழைய அங்கன்வாடி மையத்தில் உடைந்த ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கப்பட்ட கட்டடத்திற்குள் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் மழையில் நனைந்து வீணாகிறது.நாடக மேடையில் வைத்து பொருட்களை எடை போடுவதால் திறந்த வெளியில் வெயிலில் நீண்ட நேரம் காத்து கிடக்கிறோம். புதிய கடை பயன்பாட்டிற்கு வராததால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்றனர். வட்ட வழங்கல் துறையினர் கூறுகையில், ஒப்பந்ததாரர் சாவி ஒப்படைக்காததே கடை திறக்காததற்கு காரணம். விரைவில் திறக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி