தாட்கோ முறைகேடு வழக்கு
மதுரை: மதுரை செல்வகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக (தாட்கோ) தொழில்நுட்ப பிரிவில் ஒப்பந்தங்கள், திட்டப் பணிகளில் நிதி முறைகேடு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு புகார் அனுப்பினேன். விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பு‛மனுவை விசாரித்து 30 நாட்களில் உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என தெரிவித்தது. நீதிபதிகள் டிச.16 க்கு ஒத்திவைத்தனர்.