உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரிஷபம் கால்வாயை சீரமைக்க வேண்டும்

ரிஷபம் கால்வாயை சீரமைக்க வேண்டும்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே ரிஷபம் ஊராட்சியில் சேதமடைந்த கால்வாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயி முருகேசன் கூறியதாவது: கட்டக்குளம் கண்மாய் பாசனத்தை நம்பி 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. செங்கமடையில் வெளியேறும் தண்ணீர் இப்பகுதிக்கு வருவதற்கு பொதுப்பணித்துறையினரால் 40 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது இதன் இரு கரைகளும் ஆங்காங்கே உடைந்து சேதமடைந்துள்ளன. சில இடங்களில் கால்வாய் இருந்த தடயமே இல்லாமல் மறைந்துள்ளது. இதனால் ஏராளமான ஏக்கர் நிலங்களுக்கு போதுமான தண்ணீர் செல்லாமல் விளைச்சல் பாதித்துள்ளது. விவசாயிகள் பெருத்த நஷ்டமடைந்துள்ளனர். கால்வாய்க்கு தண்ணீர் வரும் செங்கமடையும் சேதம் அடைந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மடை, கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை