உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டு தெருவின் அவலம்

ஜல்லிக்கட்டு தெருவின் அவலம்

விக்கிரமங்கலம்: செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் ஊராட்சி நரியம்பட்டி ஜல்லிக்கட்டு தெரு சேறும், சகதியுமாக உள்ளது. இந்த தெருவின் நுழைவுப் பகுதியில் 70 மீ., துாரத்திற்கு பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரவில்லை. ஆனால் தெருவுக்குள் சிமென்ட் சாலைகள் சில ஆண்டுகளுக்கு முன் அமைத்து தரப்பட்டுள்ளது. இதனால சேறும் சகதியுமான பகுதியில் மழை நேரங்களில் மழைநீர் தேங்குகிறது. இவ்வழியாக டூவீலர், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக செல்ல முடியாத நிலை உள்ளது.சீனியம்மாள் கூறுகையில், ''நான் திருமணமாகி வந்தது முதல் சாலை வசதி கேட்டு வருகிறேன். தற்போது என் பேரனை பள்ளி வாகனத்தில் அனுப்ப துாக்கி வர முடியாத அளவுக்கு சகதி, மழைநீர் நிற்கிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் சாலை வசதி செய்து தந்தால் மட்டுமே வீட்டு ரசீது கட்டுவேன் என கூறி விட்டேன்'' என்றார்.ஊராட்சி நிர்வாகம் தரப்பில், ''சாலை அமைக்க கருத்துரு அனுப்பி, நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கிறோம். விரைவில் சாலை அமைத்து தரப்படும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை