பாலாபிஷேகம் இன்று இல்லை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கு பக்தர்கள் கொண்டுவரும் பால் இன்று (அக். 17) மட்டும் அபிஷேகம் செய்யப்படமாட்டாது. மூலவர் மலையின் அடிவாரத்தில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கொண்டு வரும் பால், பன்னீர், விபூதி உள்பட அனைத்து அபிஷேகங்களும் மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கே நடக்கிறது. இன்று காலை வேல், மலைமேல் கொண்டு செல்லப்பட்டு சுனை தீர்த்தத்தில் அபிஷேகம் நடக்கும். மீண்டும் இரவு மூலவர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்படும். அதனால் இன்று மட்டும் பக்தர்கள் கொண்டுவரும் பால் வேலுக்கு அபிஷேகம் நடக்காது. கோயில் நடை திறப்பு, பூஜை வழக்கம்போல் நடக்கும்.