திருஞானசம்பந்தர் குரு பூஜை விழா
மதுரை: மதுரை ஆதினத்தில் அதன் குரு முதல்வர் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா 5 நாட்கள் நடக்கிறது.முதல்நாள் விழாவில் விக்கிரமசிங்கபுரம் பேராசிரியை விஜயலட்சுமிக்கு 'மங்கையர்க்கரசி விருது', ரூ.5000 பொற்கிழி, திருநெல்வேலி வழக்கறிஞர் குற்றாலநாதருக்கு 'வ.உ.சி., விருது' ரூ.5000 பொற்கிழியை மதுரை ஆதினம் வழங்கினார். ஆதினப் புலவர் கருணாசேகர், நிர்வாகிகள் எழில் பரமகுரு, பால மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.