இசை, நாடகத்தில் திருக்குறள்
அலங்காநல்லுார்: பரவை மங்கையர்க் கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலர் அசோக்குமார், இயக்குனர் சக்தி பிரனேஷ் தலைமை வகித்தனர். இணை இயக்குனர் சரவண பிரதீப்குமார், முதல்வர் உமா பாஸ்கர், கல்வி புல தலைவி செந்துார் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் சுசீலா வரவேற்றார். கிராமிய வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், ராஜா ராணி ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திருக்குறளின் பெருமையை போற்றும் வகையில் நாட்டிய நாடகத்தை முத்து நாட்டிய பள்ளி மாணவி களும், திருக்குறளின் மாண்பினை மாணவி களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நாடகத்தை மதுரை எம்.ஆர்.எம்., நாடக மன்றமும் நடத்தியது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற நிர்வாக குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். துறை இயக்குனர் அவ்வை அருள் நன்றி கூறினார்.