உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஹிந்து முன்னணி, முஸ்லிம் அமைப்புகள் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஹிந்து முன்னணி, முஸ்லிம் அமைப்புகள் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையில் நேற்று முன்தினம் தடையை மீறி ஆடு பலியிடச் சென்ற முஸ்லிம் அமைப்பினர் மீதும், அனுமதியின்றி ஊர்வலம் சென்ற ஹிந்து முன்னணியினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மலைமீது ஆடு, சேவல் அறுக்க போலீசார் தடை விதித்துள்ளனர். நேற்று முன்தினம் ஆடு அறுப்பதற்காக முஸ்லிம்கள் சிலர் ஆட்டுக்குட்டியை துாக்கிக் கொண்டு, பள்ளிவாசலில் இருந்து மலைக்கு ஊர்வலமாக சென்றனர். பெரிய ரத வீதியில் மலைக்குப்போகும் பாதையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். தடையை மீறிச் சென்ற ஐக்கிய ஜமாத், எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அமைப்புகள் மீது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதி இன்றி பொதுவெளியில் கூடுதல், ஊர்வலமாக செல்லுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.நேற்று முன்தினம் திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணியினர், திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்பது சம்பந்தமாகவும், மலைமீது ஆடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் மண்டபத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.அனுமதியின்றி ஊர்வலமாக சென்றது, பொதுவெளியில் கூட்டம் கூடியது, பொது அமைதிக்கு பங்கம் விளைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் ஹிந்து முன்னணியினர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
ஜன 20, 2025 08:19

இந்து முன்னணியினர் மட்டும் தான் ஊர்வலம் போக வேண்டுமா.... முருகனை கும்பிடும் அத்தனை மக்களும் கூடி இருக்க வேண்டாமா ???


Tetra
ஜன 21, 2025 07:47

ஹிந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரும் போயிருக்க வேண்டும். ஓசி ஆட்டு ப்ரியாணிக்கு ஆசைப்படுபவன் எப்படி போவான்


சமீபத்திய செய்தி