உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருவள்ளுவர் தின விழா

திருவள்ளுவர் தின விழா

மதுரை: மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் மலைப்பட்டியில் உள்ள தானம் கல்வி நிலையத்தில் திருவள்ளுவர் தின விழா நடந்தது. சோழவந்தான், முள்ளிப்பள்ளம், காடுபட்டி, பன்னியான், பேட்டை, கீழ மட்டையான் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். திருக்குறள் ஒப்பித்தல், கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி நடந்தது. தொடர்ந்து நடந்த விழாவில் இயக்குநர் குருநாதன் வரவேற்றார். நீர் ஆய்வு பகுப்பாளர் ஆறுமுகம் திருவள்ளுவரும் திருக்குறளும் என்ற தலைப்பில் பேசினார். எழுத்தாளர் தீபா நாகராணி திருவள்ளுவர் தின விழா சிறப்புகளை விவரித்தார். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஜெயந்தி, சரவணகுமார், மணிமேகலை, சுமதி ராணி கவுரவிக்கப்பட்டனர். துணை இயக்குநர் தியாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை