உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., செயலாளர் கொலையில் தப்பிக்க முயன்றவர்களுக்கு கால்முறிவு

பா.ஜ., செயலாளர் கொலையில் தப்பிக்க முயன்றவர்களுக்கு கால்முறிவு

மதுரை: மதுரை பா.ஜ., ஓ.பி.சி., மாவட்ட செயலளார் சக்திவேல் 35, கொலையில் கைதானவர்கள் தப்பிக்க முயன்றபோது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.மதுரை மஸ்தான்பட்டி குறிஞ்சி ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த சக்திவேல், அரிசி அரைத்து தரும் மில் நடத்தினார். நேற்றுமுன்தினம் வண்டியூரில் கொலை செய்யப்பட்டார். ரூ.50 ஆயிரம் பணப்பிரச்னையில் கொலை செய்தது அவரது ஊழியர்கள் மருதுபாண்டி, தம்பி ரஞ்சித்குமார் கூட்டாளிகள் அண்ணாநகர் தென்னரசு 21, ஆகாஷ் 27, அகிலன் 25, கைது செய்யப் பட்டனர்.கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்ய அவர்களை பாண்டியன் கோட்டை பிருந்தா நகர் கல்குவாரி பள்ளத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது மருதுபாண்டி, ரஞ்சித்குமார், தென்னரசு தப்பிக்க முயன்றபோது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை