வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதெல்லாம் விடியல் அரசின் சாதனைகளாக கல்வெட்டுகளில் எழுதி வைக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது
24-Mar-2025
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் ஏட்டு முத்துக்குமார் 40, கொலை செய்யப்பட்டார்.உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் டிரைவராக இருந்தார். நேற்று மாலை பணி முடிந்து முத்தையன்பட்டி மதுக்கடையில் 'மப்டி'யில் மது அருந்தும் போது, அங்கே சிலரிடம் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்து வெளியே வந்த முத்துக்குமார், கள்ளபட்டி ராஜாராம் என்பவருடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு வந்தார்.அவர்களை பின்தொடர்ந்து கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவரையும் கற்களால் தாக்கியதில் முத்துக்குமார் பலியானார். ராஜாராம் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. அரவிந்த், டி.எஸ்.பி., சந்திரசேகரன் ஆய்வு செய்தனர். இறந்த முத்துக்குமார் 2009ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 3வது கொலை
மதுரையில் மட்டும் இந்தாண்டில் 3 போலீஸ்காரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிப்.2ல் குடும்ப பிரச்னையில் நாகையாபுரம் ஸ்டேஷன் போலீஸ்காரர் சிவா வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மார்ச் 18 ல் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தனிப்படை போலீஸ்காரர் மலையரசன், மதுரை ரிங் ரோட்டில் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார். நேற்று உசிலம்பட்டி ஏட்டு முத்துக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக அளவில் மதுரையில் 3, சென்னையில் ஒரு எஸ்.ஐ., என மொத்தம் 4 போலீசார் இந்தாண்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதெல்லாம் விடியல் அரசின் சாதனைகளாக கல்வெட்டுகளில் எழுதி வைக்க வேண்டும்.
24-Mar-2025