மேலும் செய்திகள்
9 பேருக்கு சிறை
20-May-2025
மதுரை: 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தலா பத்தாண்டு சிறை, ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.2021 ஜூலை 8ல் மதுரை கீரைத்துறை ஸ்டேஷனுக்குட்பட்ட சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே போலீசார் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த டி.என். 59 சி.கே.,3492 பதிவெண் கொண்ட காரை சோதனை செய்த போது 28 கிலோ கஞ்சா இருந்தது. அதைக் கடத்தி வந்த சிவகங்கை மேலராங்கியத்தைச் சேர்ந்த லோடு முருகன் 42, மதுரை அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியைச்சேர்ந்த ரவிக்குமார் என்ற தவளை ரவி 32, மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த சத்தியேந்திரன் 32, ஆகியோரை கைது செய்த போலீசார், கஞ்சா, கார், டூவீலரை கைப்பற்றி வழக்கு பதிந்தனர். மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் மூவருக்கும் தலா பத்தாண்டு சிறை, ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்து நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கீரைத்துறை போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.
20-May-2025