பஸ் ஸ்டாண்டில் கால அட்டவணை
திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. இந்த பஸ் ஸ்டாண்டின் உள்பகுதியில் கிராம பகுதிகளில் இருந்து பஸ்களின் நேரம், மதுரையில் இருந்து திருமங்கலம் வழியாக கிராமப் பகுதிகளுக்கு பஸ்கள் செல்லும் நேரம் குறித்த கால அட்டவணை முன்பு வைக்கப்பட்டு இருந்தது. பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்பட்டதால் பழைய அட்டவணை இருந்த போர்டு அகற்றப்பட்டது. போர்டு இல்லாததால் பஸ்ஸ்டாண்டுக்குள் வரும் பயணிகள் பஸ்கள் குறித்த தகவல் தெரியாமல் அவதிப்படுகின்றனர். கால அட்டவணை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.