உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருநெல்வேலி --- சென்னை எழும்பூர்வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் பயணிகள் வலியுறுத்தல்

திருநெல்வேலி --- சென்னை எழும்பூர்வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் பயணிகள் வலியுறுத்தல்

மதுரை : ''திருநெல்வேலி - - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்'' என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருநெல்வேலி - சென்னை இடையே வாரத்தில் 6 நாட்கள் 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்படுகிறது. ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு உள்ளது. தற்போது 8 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.பயணிகள் கருத்து:சொக்கலிங்க நகர் சுந்தர பாண்டியன்:சென்னைக்கு பல அதிவிரைவு ரயில்களை இயக்கினாலும் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. வந்தே பாரத் ரயிலில் குறைவான பெட்டிகளை இணைப்பதால், டிக்கெட் எடுக்க கடினமாக உள்ளது. மக்கள் அதிகம் விரும்பும் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்தால் ரயில்வே துறைக்கு வருமானம், மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்றார்.ஆரப்பாளையம் செல்லத்துரை:அவசர காலங்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகம் உள்ளதால் வந்தே பாரத் ரயிலில் இடம் கிடைக்காமல் தவிக்கிறோம். தற்போது 8 பெட்டிகளே இணைக்கப்படுகின்றன. கூடுதலாக பெட்டிகளை இணைத்தால் மக்கள் அதிகம் பயன்படுத்துவர், என்றார்.பயணிகள் நலச் சங்க பொதுச்செயலாளர் பத்பநாதன் கூறுகையில், ''சென்னைக்கு வியாபாரிகள், தொழில் முனைவோர், பொறியாளர்கள் என பலமாவட்டங்களில் இருந்தும் அதிகமானோர் செல்கின்றனர். நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி பயணிகளுக்கு ரயிலில் இடம் கிடைக்க சிரமமாக உள்ளது என்ற கருத்து தெரியவந்துள்ளது. இதனால் 16 பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
அக் 08, 2024 09:15

வந்தே பாரத் ரயிலில் நிமித்தமாதிரி பெட்டிகள் இணைக்க இயாளாது டெசினிகளாக தெரிந்து பேசுங்கள்


முக்கிய வீடியோ