மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
09-Aug-2025
கோயில் ஆடி உற்ஸவம்: ஆலமரத்தடி சுயம்பு லிங்கம் அய்யனார் சுவாமி, முனியாண்டி சுவாமி கோயில், ஆத்திகுளம், மதுரை, அன்னதானம், மதியம் 12:00 மணி. ஆண்டு உற்ஸவம்: இருக்கண்குடி மாரியம்மன், முத்துக் கருப்பண சுவாமி கோயில், சொக்கலிங்கநகர், மதுரை, முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி, காலை 8:30 மணி, அன்ன தானம், காலை 11:00 மணி, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி. கிருஷ்ண ஜென்மாஷ்டமி மஹோத்ஸவம்: ஸ்ரீகிருஷ்ண பலராம் கோயில், திருப்பாலை, சிறப்பு பூஜைகள், காலை 8:00 மணி முதல், யாதவர் கல்லுாரி வளாகத்தில் - ஒரே இடத்தில் 7 முக்கிய திருத்தலங்கள் தரிசனம், ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை, ஸ்ரீல பிரபுபாதர் வினாடி வினா, மாலை 5:00 மணி, கிருஷ்ணர் உருவம் ட்ரோன் ஷோ, இரவு 7:00 மணி. திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தியை முன்னிட்டு கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:30 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி. ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவு புரம், மதுரை, காலை 10:00 மணி. பக்தி சொற்பொழிவு செம்பொருள் காண்பதறிவு: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ர சிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள், நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி. கிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்க பிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. கிருஷ்ண ஜெயந்தி நாமசங்கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி. ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு பகவத் கீதை சம்பூர்ண பாரா யணம்: நிகழ்த்துபவர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி. பள்ளி, கல்லுாரி திருக்குறள் திருப்பணிகள் - தொடர் வகுப்பு: மணியம்மை பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, பயிற்சி அளிப்பவர்: திருக்குறள் மாமன்றம் செயலாளர் அழகுராசு, ஏற்பாடு: அரசின் தமிழ் வளர்ச்சித்துறை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. ஏ.பி.டி.துரைராஜ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம விழா: டாக்டர் டி. முத்துசாமி மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி ரோடு, மதுரை, காலை 9:00 மணி. பொது ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் 'எலான்ஸா' புதிய குடியிருப்பு திட்டம் அறிமுகம்: ஊமச்சிகுளம், துவக்கி வைப்பவர்: நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தினர், காலை 9:00 மணி. பொதுத்தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்ற சவுராஷ்டிரா மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கல்வி விருது வழங்கும் விழா: தமிழ்நாடு தொழில் வர்த்தக மையம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் பாஸ்கர், ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்ட்ர சபா, காலை 8:00 மணி. ஆண்டு விழா: அசல் மலபார் பீடி மாளிகை, அவனியாபுரம், தலைமை: ஆலோசகர் பெரீஸ் மகேந்திர வேல், சிறப்பு விருந்தினர்: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மாநகர் தெற்குபகுதி அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு, சோலையழகு புரம், சுப்பிரமணியபுரம், பாரதியார் ரோடு, எம்.கே.புரம் சில்லரை பல சரக்கு வியாபாரிகள் சங்கம், காலை 11:00 மணி. மாதாந்திர கூட்டம்: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் சுவாமியப்பன், செயலாளர் சண்முகலால், சிறப்பு விருந்தினர்கள்: உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியன், ஜெயபிரகாஷ், ஏற்பாடு: மதுரை தபால்தலை, நாணயங்கள் சேகரிப்போர் சங்கம், காலை 10:30 மணி. மதுரை காமராஜ் பல்கலை பிரச்னைகள், தீர்வுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்: நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: பல்கலை பாதுகாப்புக் குழு, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. நீர், நிலம், பயிர், மனித ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் உயிர் உரப் பயன்பாடு விழிப் புணர்வு கூட்டம்: ஸ்ரீபிரியா காம்ப்ளக்ஸ், ரிசர்வ் லைன், மதுரை, ஏற்பாடு: எம்.ஆர்.டி., அசோசியேட்ஸ், மதியம் 3:00 மணி. விளையாட்டு மாநில அளவிலான சப்ஜூனியர் பூப்பந்தாட்டப் போட்டி: ஓ.சி.பி.எம்., பெண்கள் பள்ளி மைதானம், லேடி டோக் கல்லுாரி விளையாட்டு மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம், மதுரை பூப்பந்தாட்டக் கழகம், காலை 7:00 மணி. மருத்துவம் இலவச மருத்துவ முகாம்: எஸ்.எம்.கே., மஹால், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ். காலனி, மதுரை, ஏற்பாடு: சியாமளா ஹெல்த் கேர், காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி. இலவச கண் பரிசோதனை முகாம்: மாநகராட்சி பாண்டிய வேளாளர் நடுநிலைப்பள்ளி, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, தலைமை: டாக்டர் சீனிவாசன், துவக்கி வைப்பவர்: ஓட்டல்கள் சங்கத் தலைவர் குமார், கவுன்சிலர் அருண்குமார், ஏற்பாடு: ராமச் சந்திரா கண் மருத்துவமனை, நண்பேன்டா அறக்கட்டளை, லயன்ஸ் கிளப் ஆப் மதுரை விக்டரி, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. கண்காட்சி கட்டடப் பொறியாளர் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மதுரை கட்டடப் பொறியாளர்கள் சங்கம், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி. சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் விற்பனை, கண்காட்சி: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. கலாஷேத்ரா கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. லெதர் காலணிகள் கண்காட்சி, விற்பனை: மடீட்சியா அரங்கம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீலெதர்ஸ் நிறுவனம், காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.
09-Aug-2025