உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / பிப். 23 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / பிப். 23 க்குரியது

கோயில் மாசி மகம் தெப்பத்திருவிழா - 4ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, கள்ளர் திருக்கோலத்தில் தெற்காவணி மூலவீதி வழியாக பல்லக்கில் சுவாமி எழுந்தருளுதல், காலை 11:00 மணி, மோகினி கோலத்தில் கருட வாகனத்தில் சுவாமி சன்னதிக்கு புறப்படுதல், இரவு 7:00 மணி. மாசி பெருந்திருவிழா - 3ம் நாள்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, சுவாமி வீதியுலா, காலை 10:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி. பக்தி சொற்பொழிவு திருமந்திரம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. பிரஷ்ண உபநிஷத்: நிகழ்த்துபவர் - ஸ்ரீகாந்த், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பொது எண்மர் போற்றும் எண் குணத்தான் - தேடி கண்டுகொண்டேன்: அபிநவ வித்யா தீர்த்த சபா மண்டபம், சிருங்கேரி சாரதா அம்பாள் கோயில், பைபாஸ் ரோடு, மதுரை, இசையரங்கம் நிகழ்த்துபவர்: அருண்பிரபா ரங்கநாதன், மாலை 5:00 மணி, உரையரங்கம் நிகழ்த்துபவர்: சுவாமிநாதன் சிவாச்சாரியார், ஏற்பாடு: சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய மஹாசமஸ்தானம் தட்சிணாம்னாய சாரதா பீடம், மாலை 6:50 மணி. தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோர் மாநாடு: ஓட்டல் கோர்ட்யார்ட் மதுரை, சிறப்புரை: தமிழக அரசின் 'பேம் டிஎன்' நிர்வாக இயக்குநர் நிர்மல்ராஜ், பங்கேற்பு: பிரதான் மந்திரி மைக்ரோ புட் பிராசசிங் என்டர்பிரைசஸ் திட்ட இயக்குநர் நந்தகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், ஏற்பாடு: மாநில தொழில், வணிகத்துறை, தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கம், காலை 9:30 மணி. தியாகி அ.வைத்தியநாதய்யர் 71வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தல்: கீழச்சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி சந்திப்பு, மதுரை, தலைமை: துணைமேயர் நாகராஜன், ஏற்பாடு: செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம், காலை 8:00 மணி. தியாகி அ.வைத்தியநாதய்யர் 71வது ஆண்டு நினைவு நாள் விழா - ஊர்வலம்: செனாய் நகர் மாணவர் இல்லம் முதல் அம்மன் சன்னதி அருகில் உள்ள வைத்தியநாதய்யர் சிலைக்கு மாணவர்கள் ஊர்வலம் சென்று மாலை அணிவித்தல், என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிட பள்ளி, விநாயக நகர், டாக்டர் தங்கராஜ் சாலை , மதுரை, தலைமை: உறைவிட பள்ளி தலைவர் சாமித்துரை, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி கலைமதி, சிறப்புரை: மதுரை இலக்கிய பேரவை தலைவர் சண்முக திருக்குமரன், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், ஏற்பாடு: தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம், மாலை 6:00 மணி. பள்ளி, கல்லுாரி வீரமாமுனிவர், இதழியல் அறக்கட்டளை கருத்தரங்கம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: டான் போஸ்கோ பள்ளி நிர்வாகி மரியதாஸ், முன்னிலை: முதல்வர் பாத்திமா மேரி, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், காலை 9:00 மணி, இதழியல் கருத்தரங்கம்: மதியம் 12:00 மணி. என்.எஸ்.எஸ்., முகாம் தொடக்க விழா: உச்சப்பட்டி, தலைமை: கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, முன்னிலை: தலைவர் விஜயராகவன், ஊராட்சி தலைவர் பிச்சையம்மாள், ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மாலை 4:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை