மேலும் செய்திகள்
மதுரை மாவட்டம் நிகழ்ச்சி
01-Jul-2026
ஜூலை 3கோயில் * கும்பாபிஷேகம் - 2ம் கால யாகவேள்வி: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:30 மணி, 3ம் கால யாகவேள்வி, மாலை 5:30 மணி. * கோயில் உற்ஸவம் - அம்மனுக்கு கூழ்காய்ச்சி குளுமை சாற்றி, கொடியேற்றம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், புட்டுத் தோப்பு ரோடு, மதுரை, மாலை 6:00 மணி. * கோயில் உற்ஸவம் - காப்பு கட்டுதல்: மாரியம்மன் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மாலை 6:30 மணி. * சங்கடஹர சதுர்த்தி: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, பாண்டியராஜபுரம் மேட்டுத் தெரு, பெத்தானியாபுரம், மதுரை, பொற்பனை விநாயகர், சித்தி புத்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணி, சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. * சங்கடஹர சதுர்த்தி பூஜை: சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, மாலை 4:00 மணி. * சங்கடஹர சதுர்த்தி பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மாலை 4:00 மணி. * ஆனி 3ம் வெள்ளியை முன்னிட்டு ஆயுததாரி அலங்காரத்தில் சுவாமி: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி. * குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள். * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி. பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. * திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. * பகவத்கீதை - அத்தியாயம் 3: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. * விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரி * கண்ணன் - ஈஸ்வரி அறக்கட்டளை சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்தாட்டப் போட்டிகள் - பரிசளிப்பு, நிறைவு விழா: விருதுநகர் ஹிந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி துறைத் தலைவர் ரமேஷ், மதியம் 3:00 மணி. பொது * மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், காலை 10:30 மணி. * அன்றாட வாழ்வில் கணிதம் - கருத்தரங்கம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: திருமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுாரி கணிதத்துறை கவுரவ விரிவுரையாளர் மீனா, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், மாலை 5:00 மணி. * சுவாமி விவேகானந்தர் நினைவு சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: எஸ்.பி.ஐ., வங்கி முன்னாள் உதவிப் பொதுமேலாளர் மீனாட்சி சுந்தரம், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி. மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. * நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல். கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை. * கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெண்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை. * மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
01-Jul-2026