மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / அக்.26 க்குரியது
26-Oct-2025
கோயில் கும்பாபிஷேகம்: கூத்தப்பெருமாள் கோயில், குருத்துார் - ஜோதியாபட்டி இடையே, பொய்கைக்கரைப்பட்டி, புன்னியாகவாசனம், நித்தியஹோமம், பூர்ணாஹூதி, காலை 8:00 மணி, அதிவாச ஹோமம், பிரதானஹோமம், திருவாராதனம், ஏற்பாடு: குருத்துார் - ஜோதியாபட்டி கிராமத்தினர், மாலை 5:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி. ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி. பக்தி சொற்பொழிவு லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி. மெய்கண்டான் சிவனடியார் திருக்கூட்ட சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சாந்தி குமார சுவாமிகள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி குணார்ணவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. பள்ளி, கல்லுாரி திருக்குறள் திருப்பணிகள் - தொடர் வகுப்புகள்: மணியம்மை பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, பயிற்றுநர்: மதுரை காமராஜ் பல்கலைக்கழக கல்லுாரி உதவிப் பேராசிரியர் ராமர், தமிழறிஞர் குறளடியான், ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித் துறை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. பொது மாநில அளவிலான சின்மயா கீதை ஓதும் போட்டி: ஆகாஷ் கிளப், பரவை, துவக்கி வைப்பவர்: டி.ஏ.ஜி., குழும நிர்வாக இயக்குநர் ரகுராம், ஆசியுரை: சுவாமி ஸ்ரீதரானந்தா, காலை 9:00 மணி, நிறைவு விழா, பரிசளிப்பு, சிறப்பு விருந்தினர்: தாமரை பிரதர்ஸ் மீடியா நிறுவன இயக்குநரும், தினமலர் நாளிதழின் இணை இயக்குநருமான ஆர்.லட்சுமிபதி, ஆசியுரை: சுவாமி சிவயோகானந்தா, ஏற்பாடு: மதுரை சின்மயா மிஷன், மதியம் 2:15 மணி. 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டை முன்னிட்டு கருத்தரங்கம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், சிறப்பு விருந்தினர்கள்: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், நேதாஜி சுவாமிநாதன், காலை 10:00 மணி. இசை கச்சேரி: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், மதுரை, தல்லாஸ் ஸ்மித், சூசன் மஜர் ஆகியோரின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் புல்லாங்குழல் இசை, ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி. பள்ளி மாணவர்களுக்கான ஏழிளந்தமிழ் எழுத்துப் போட்டி: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி, காலை 9:00 முதல் 10:00 மணி வரை, 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி, காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1,2, 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: கோவிந்த தாஸ சேவா ஸமாஜம், மஹால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. தண்டகாரண்யம், பைசன் திரைப்படங்களுக்கு பாராட்டு, விமர்சனக் கூட்டம்: மணியம்மையார் மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: த.ம.ப.க., நிர்வாகி சுவலட்சுமி, கருத்து பகிர்தல்: கவிஞர் ஆரண்யா, எழுத்தாளர் தீபா நாகராணி, த.ம.ப.க., தலைவர் பாண்டியன், வைகை திரைப்பட இயக்க நிர்வாகி கருப்பு பிரபா, ஏற்பாடு: தமிழக மக்கள் பண்பாட்டு கழகம் (த.ம.ப.க.,), காலை 10:00 மணி. மருத்துவம் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு முகாம்: பாதே விவேக் கிளினிக், சந்தைப்பேட்டை, காமராஜர் ரோடு, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ஸ்வாதி, வசந்தா, மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை. கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை. 'காந்தி சில்ப் பஜார்' - அகில இந்திய கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பெட்கிராட் நிறுவனம், கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு இயக்ககம், காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
26-Oct-2025