உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / அக்.8

இன்றைய நிகழ்ச்சி / அக்.8

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி. பக்தி சொற்பொழிவு திருவருட்பா : நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி. பொது மதுரை நகர் தி.மு.க., செயற்குழுக் கூட்டம்: டிவின்ஸ் மகால், அண்ணா நகர், மதுரை, தலைமை: தென்மண்டல பொறுப்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னிலை: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், ஏற்பாடு: நகர் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., மாலை 5:00 மணி. ஜி.எஸ்.டி., வரி குறைப்பு குறித்து சிறப்புரை: நியூ வி.எம்.சி., அலுவலகம், 2, முதல் தெரு, சாலைமுத்து நகர் மெயின் ரோடு, எல்லீஸ்நகர், மதுரை, பேசுபவர்: சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் சரவணகுமார், பங்கேற்பு:நிர்வாகிகள் இளங்கோவன், கந்தசாமி, முத்துக்குமார், ஏற்பாடு: வெள்ளாளர், முதலியார் சேம்பர் ஆப் காமர்ஸ், மாலை 6:00 மணி. குறிஞ்சிப்பாட்டில் சூழலியல் சிந்தனைகள்: நிகழ்த்துபவர் - மதுரை காந்தி என்.எம்.ஆர்., சுப்பராமன் மகளிர் கல்லுாரி முதல்வர் கோமதி, உலக தமிழ்ச்சங்கம், மதுரை, காலை 10:30 மணி. காந்தி ஜெயந்தி விழா - மாணவர்களின் வழிகாட்டி மகாத்மா காந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - பட்டிமன்ற பேச்சாளர் டோக்கியோ ராமநாதன், காந்தி நிகேதன் ஆசிரமம், தே.கல்லுப்பட்டி, தலைமை: செயலாளர் ராகவன், ஏற்பாடு: மதுரை காந்தி மியூசியம், காலை 10:30 மணி. சைவ சித்தாந்த வகுப்புகள்: தருமபுர ஆதின மடம், தானப்ப முதலி தெரு, மதுரை, வகுப்பு எடுப்பவர்கள்: முன்னாள் பேராசிரியர் அருணகிரி, பேராசிரியர் அற்புதராணி, புலவர்கள் பரமேஸ்வரி, ராதா, மாலை 6:00 மணி. மருத்துவம் பல் மருத்துவ முகாம்: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, தியாகி சங்கரலிங்கனார் தெரு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை. விளையாட்டு மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான கல்லுாரி மாணவிகள் பிரிவு கிரிக்கெட் போட்டிகள்: மதுரைக் கல்லுாரி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, சோலைமலை பொறியியல் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி. கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி