உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / அக்.9

இன்றைய நிகழ்ச்சி / அக்.9

கோயில் 45 ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் விழா: மகேஸ்வரி அம்மன் கோயில், மறைமலை அடிகள் தெரு, சதாசிவா நகர், மதுரை, அன்னதானம், மதியம் 12:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி. குருவாரம் முன்னிட்டு சிறப்பு பூஜை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன்ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி. பக்தி சொற்பொழிவு திருவாசகம் : நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.தியானமும், யோகமும்: நிகழ்த்துபவர் - பிரஜாபிதா பிரம்மா குமாரிகள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி மனசா, புத்தியா உணர்வுகள் மேலாண்மைக்கான பயணம் கருத்தரங்கம்: சிறப்பு விருந்தினர்: நிகில் அறக்கட்டளை நிறுவனர் நாகலிங்கம், செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மதுரை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், கல்லுாரி நிர்வாகம், காலை 10:00 மணி, தமிழ் வளர்ச்சியில் பெருஞ்சித்திரனாரின் ஆக்கங்கள் கருத்தரங்கம்: நிகழ்த்துபவர் - தமிழறிஞர் பொழிலன், தலைமை: செயலாளர் மாரியப்பமுரளி, பங்கேற்பு: முதல்வர் சாந்திதேவி, மதியம் 1:30 மணி. அறிவியல் மற்றும் சமூகம் கருத்தரங்கம்: மதுரை கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி பொருளாளர் ஆனந்த் சீனிவாசன், சிறப்புரை: முன்னாள் தலைமை ஆசிரியர் கோபாலக்கிருஷ்ணன், ஏற்பாடு: போஸ்-ஐன்ஸ்டீன் கிளப், மதியம் 12:15 மணி. கலாசார விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, மெஹந்தி, குறும்படம் உள்ளிட்ட போட்டிகள், ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், காலை 10:00 மணி முதல். அறிவியல் கருத்தரங்கம்: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், சிறப்பு விருந்தினர்: திண்டுக்கல் காந்திகிராம பல்கலை பேராசிரியர் முரளிதரன், காலை 9:45 முதல் பொது உலக பார்வை தினம் விழிப்புணர்வு ஊர்வலம்: காந்தி மியூசியம் முதல் அரவிந்த் கண் மருத்துவனை வரை, சிறப்பு விருந்தினர்: போலீஸ் துணை கமிஷனர் அனிதா, ஏற்பாடு: அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 7:00 மணி. காந்தி ஜெயந்தி விழா - காந்தியடிகளின் அமைதி சிந்தனை சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - துணைப்பேராசிரியர் யாழ் சந்திரா, என்.எம்.ஆர்.சுப்புராமன் மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி நிறுவனர் ஜவஹர்பாபு, முன்னிலை: காந்தி மியூசியம் பொருளாளர் செந்தில்குமார், ஏற்பாடு: மதுரை காந்தி மியூசியம், காலை 10:30 மணி. எஸ்.டி.அரசகுமார் பேட்மின்டன் அகாடமி திறப்பு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, சிறப்பு விருந்தினர்: அர்ஜூனா விருதுபெற்ற பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஜெயரட்சம், திறந்து வைப்பவர்: நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், காலை 10:30 மணி. ஹிந்தி பேச்சுப் பயிற்சி சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், கூடல் நகர், பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:40 மணி. மதுரை வாசகர் வட்டம் சிறப்புரை கூட்டம்: மதுரை வாசகர் வட்டமும், மாணவர்களும்: பேசுபவர் - பேராசிரியர் ராமமூர்த்தி, அல் அமீன் மேல்நிலைப் பள்ளி, கோ.புதுார், தலைமை: எழுத்தாளர் பா.சண்முகவேலு, வாழ்த்துரை: தலைமை ஆசிரியர் ஷேக் நபி, காலை 10:00 மணி. விளையாட்டு மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான கல்லுாரி மாணவிகள் பிரிவு கிரிக்கெட் போட்டிகள்: மதுரை கல்லுாரி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, சோலைமலை பொறியியல் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி. கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !