மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: மதுரை
17-Aug-2025
கோயில் சுந்தரானந்த சித்தர் ஜென்ம தின குருபூஜை விழா: பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, திருமுறை பாராயணம், காலை 9:00 முதல் 10:00 மணி வரை, புஷ்பாஞ்சலி, காலை 10:00 முதல் 10:30 மணி வரை, சிறப்பு நிகழ்ச்சிகள் துவக்கம், காலை 10:30 முதல் 11:30 மணி வரை, சிறப்புரை: செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, காலை 11:00 முதல், அன்னதானம், மதியம் 1:00 மணி. சங்கடஹர சதுர்த்தி பூஜை: காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணி. வருடாபிஷேகம், திருக்கல்யாணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, சுவாமிகள் திருமறைநாதர், வெங்கடாஜலபதிக்கு வருடாபிஷேகம், காலை 9:30 மணி முதல், வேதவள்ளி அம்மாள், திருமலைநாதருக்கு திருக்கல்யாண வைபவம், மாலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி. பக்தி சொற்பொழிவு திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. விநாயகர் அகவல் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. நாரதர் பக்தி சூத்திரம்: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி. பள்ளி, கல்லுாரி இலவச கண்பரிசோதனை முகாம்: யாதவர் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் ராஜூ, பங்கேற்பு: கல்லுாரி தலைவர் ஜெயராமன், ஸ்ரீராமச்சந்திரா கண் மருத்துவமனை முதன்மை இயக்குநர் டாக்டர் சீனிவாசன்,செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், ஓட்டல் பார்க் பிளாசா நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், ஏற்பாடு: யாதவா கல்லுாரி,ஸ்ரீராமச்சந்திரா கண் மருத்துவமனை, காலை 10:00 மணி. அருணகிரிநாதர் விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, அருணகிரிநாதர் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், மதுரை திருப்புகழ் சபைக் குழுவினர், காலை 10:30 மணி, பட்டிமன்றம்: அருணகிரிநாதர் படைப்புகளில் விஞ்சி நிற்பது பக்திநெறியா ஞான நெறியா,மதியம் 1:30 மணி. பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கூட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, தலைமை: கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வர பழனிசாமி, காலை 10:00 மணி. மகாகவி பாரதியார் நினைவுநாள் கருத்தரங்கம்: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, கோரிப்பாளையம், மதுரை, தலைமை: முதல்வர் வானதி, ஏற்பாடு: முதுகலை தமிழாய்வுத்துறை மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், காலை 10:00 மணி. ஓணம் கொண்டாட்டம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, கோலப்போட்டிகள், ஏற்பாடு: எம்.சி.ஏ., துறை, காலை 11:00 மணி. ஏழு நுால்கள் வெளியீட்டு விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, வெளியிட்டு பேசுபவர்: எழுத்தாளர் கார்த்திக் ராமச்சந்திரன், நுால்களை பெறுபவர்: பேராசிரியர் ஜோயல், ஏற்பாடு: காலச்சுவடு, உரைகல் ஆய்வாளர் மன்றம், கல்லுாரி நிர்வாகம், மாலை 5:45 மணி. பேரிடர் மேலாண்மை பிரிவு துவக்க விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பொறியாளர் பிரபு, ஏற்பாடு: பேரிடர் மேலாண்மை கமிட்டி, இன்னர் வீல் கிளப், காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை. பொது புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, பபாசி செயலாளர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா, முத்தையா, ராமகிருஷ்ணன், மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, ஏற்பாடு: தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம், கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. வெள்ளாளர், முதலியார் சேம்பர் ஆப் காமர்ஸ் அலுவலக திறப்பு விழா: வி.எம்.சி., அலுவலக அரங்கம், சாலைமுத்து நகர் மெயின் ரோடு, எல்லீஸ் நகர் விரிவாக்கம், மதுரை, தலைமை: தலைவர் இளங்கோவன், திறந்து வைப்பவர்: அமைச்சர் தியாகராஜன், காலை 10:00 மணி. உலக தற்கொலை தடுப்பு தின விழா: அரசு மருத்துவ கல்லுாரி, மதுரை, துவங்கி வைப்பவர்: டீன் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார், ஏற்பாடு: மனநல துறைத் தலைவர் டாக்டர் கீதாஞ்சலி, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. பாரதியின் ஆங்கிலப் புலமை: நிகழ்த்துபவர் - தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி, உலக தமிழ்ச் சங்கம், மதுரை, முன்னிலை: திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரி துறைத் தலைவர் முனியாண்டி, ஏற்பாடு: உலக தமிழ்ச் சங்கம், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரி, காலை 10:30 மணி. புதிய கட்சி அறிவிப்பு விழா: தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: ஜெகநாத் மிஸ்ரா, ஏற்பாடு: தேசிய செட்டியார்கள் பேரவை, மாலை 4:00 மணி. மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, முனிசிபல் காலனி, கரும்பாலை, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை. விளையாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதல்வர் கோப்பை மண்டல போட்டிகள்: ரேஸ் கோர்ஸ் மைதானம், மதுரை, பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஜூடோ, மாணவர்களுக்கான பீச் வாலிபால், கல்லுாரி மாணவர்களுக்கான குத்துச்சண்டை, மாவட்ட அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கான சிலம்ப போட்டிகள், காலை 7:00 மணி.
17-Aug-2025