மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி : மதுரை
15-Aug-2025
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 முதல் 10:30 மணி வரை. * விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ஜாங்கிட் நகர், காதக்கிணறு, மதுரை, மாலை 6:00 மணி. பக்தி சொற்பொழிவு ஸ்ரீபகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. தாயுமானவர்: நிகழ்த்துபவர் - கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. சாய் பஜனை : நிகழ்த்துபவர்கள் - சாய் சமிதி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ரமணரின் சத்தர்ஸனம், வழங்குபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:15 முதல் 10:15 மணி வரை. சத்சங்கம், கூட்டுப்பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. பள்ளி, கல்லுாரி டி.வி.எஸ்., பள்ளி 51வது விளையாட்டு விழா: பள்ளி மைதானம், மதுரை, சிறப்பு விருந்தினர்: என்.சி.சி., 7 வது தமிழ்நாடு பட்டாலியன் நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், காலை 8:45 மணி முதல். பட்டமளிப்பு விழா: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம்ல சிறப்பு விருந்தினர்: திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், துவங்கி வைப்பவர்: கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்தா, ஏற்பாடு: முதல்வர் கார்த்திகேயன், காலை 11:00 மணி. முத்தமிழ் விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் இக்னேசியஸ் மேரி, சிறப்புரை: திருச்சி தனலட்சுமி கல்லுாரி இணைப்பேராசிரியர் விஜயசுந்தரி, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 9:00 மணி. மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா: மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: டீன் காஞ்சனா, சிறப்புரை: மதுரை வேளாண்மை கல்லுாரி டீன் மகேந்திரன், சிறப்பு விருந்தினர்: புதுக்கோட்டை சமூகநலத்துறை அலுவலர் சியாமளா, காலை 10:30 மணி. பொது ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்: மடீட்சியா ஹால், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: தொழில் வல்லுநர் கிருஷ்ணன், இ.பி.சி., துணைத்தலைவர் ராமக்கிருஷ்ணன், மணிலால் படேல் கிளியரிங், பார்வேடிங் கம்பெனி குருசாமி, ஏற்பாடு: மடீட்சியா, இ.டி.ஐ.ஐ., சென்னை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி. மாவட்ட கோரிக்கை மாநாடு: மருத்துவக் கல்லுாரி கலையரங்கம், பங்கேற்பு: வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எம்.பி.முருகையன், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரகுபதி, ஏற்பாடு: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, காலை 10:00 மணி. எழுத்தாளர் அ.முத்துவேலன் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: புரட்சி பாவலர் மன்ற தலைவர் வரதராஜன், பேசுபவர்கள்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் ஸ்ரீரசா, மதுரைக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் காந்திமதி, எழுத்தாளர் சரவணன், தமிழரசன், சாத்தன்குன்றன், துர்க்கையாண்டி, ஏற்பாடு: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், புரட்சிப் பாவலர் மன்றம், மாலை 5:30 மணி. மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சங்க ஆண்டு விழா: ஜான்சி கல்யாண மகால், வாடிப்பட்டி, தலைமை: கலெக்டர் பிரவீன்குமார், பங்கேற்பு: எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், மாவட்ட சமூகநல அலுவலர் காந்திமதி, மாநில ஊரக-நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட மேலாண்மை அலகு இணை இயக்குநர் தமிழரசி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், ஏற்பாடு: கிராமிய மனநல மறுவாழ்வுத் திட்டம், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை, காலை 11:00 மணி. நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள் நுால் மதிப்பாய்வு கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, பேசுபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி. ஆணவப் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: ஆதிதிராவிட கிறிஸ்துவ கூட்டமைப்பு தலைவர் செபாஸ்டின் சூசைராஜ், முன்னிலை: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மனோகரன், ஏற்பாடு: தமிழ் மாநில பகுஜன் சமாஜ், காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை. திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்புகள்: இறையன்பு நுாலகம், திருமங்கலம், தலைமை: இறையன்பு கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை அறங்காவலர் பார்த்தசாரதி, ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை, காலை 10:00 மணி. 12 ம் ஆண்டு பேரவைக் கூட்டம்: சொக்கநாதர் திருமண மண்டபம், தருமபுர ஆதீனம், வடக்குமாசி வீதி, மதுரை, வட்ட அலுவலக ஓய்வு அலுவலர்களை கவுரவித்தல், பங்கேற்பு: கவுரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில தலைவர் கருணாகரன், ஏற்பாடு: தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய ஓய்வூதியர் சங்கம், காலை 9:00 மணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க மதுரை கிளையின் 12ம் ஆண்டு பேரவை கூட்டம்: சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசிவீதி, மதுரை, தலைமை: தலைவர் கோதண்டராமன், பங்கேற்பு: மண்டல தலைமை பொறியாளர் கணேஷ், வட்ட மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமரன், காலை 9:00 மணி. மருத்துவம் பள்ளி குழந்தைகளுக்கான கண் மற்றும் காது மருத்துவ பரிசோதனை முகாம்: புஸ்கோ மெட்ரிக் பள்ளி. வாடிப்பட்டி, தலைமை: ஏ.என்.டி., அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜெயராஜசேகர், துவங்கி வைப்பவர்: முதல்வர் ரோணிக்கா சந்திரா, ஏற்பாடு: ஏ.என்.டி., கல்வி மருத்துவம் மற்றும் அறக்கட்டளை, விருதுநகர் இன்னிசை, மதுரை மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண்பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்: கே.எஸ்.மகால், கற்பக நகர், வில்லாபுரம், துவக்கி வைப்பவர்: கோயில் அறங்காவலர் தர்மராஜ், ஜெயபாரதி, டாக்டர் ஹரிபிரசாத், ஏற்பாடு: மதுரவிநாயகர் கோயில், அரவிந்த் கண் மருத்துவமனை, அழகர் சர்க்கரைநோய் சிகிச்சை மையம், காலை 9:00 முதல் மதியம் 1:30 மணி வரை. கண்காட்சி அக்ரிடெக் விவசாய கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் கண்காட்சி வளாகம், மதுரை, ஏற்பாடு: யுனைடெட் டிரேட் பேர் இந்தியா, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. சேலைகள், சுடிதார்கள், ஆடவர் ஆடைகள் விற்பனை, கண்காட்சி: சிவகாமி, ராஜம் பிளாசா, தல்லாகுளம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
15-Aug-2025