கோயில் ஐயப்ப சுவாமி 59வது மண்டல பூஜை விழா: முத்தையா சுவாமி கோயில், கோச்சடை, ஐயப்ப சுவாமிக்கு அபிஷே கம், ஆராதனை, அன்னதானம், காலை 8:40 மணி முதல், ஜெகதீஸ் பாண்டியன் பாண்டி முனீஸ்வரர் கலைக்குழுவினரின் ஐயப்ப பஜனை, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கோச்சடை கிளை, மாலை 5:30 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி. மார்கழி வெள்ளி முன்னிட்டு சிறப்பு பூஜை: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, சிறப்பு பூஜை, அலங்காரம், பிரசாதம் வழங்குதல், இரவு 7:00 மணி. பூரட்டாதி நட்சத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி. பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை: சபரீஷ்பாபு, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி. அதிருத்ர மஹாயக்ஞம் வைபவம்: லட்சுமி சுந்தரம் ஹால் வளாகம், கோகலே ரோடு, மஹன்யாஸம் ஆரம்பம், காலை 5:30 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மதியம் 12:00 மணி முதல், ருத்ர கிரமார்ச்சனை, மாலை 5:00 மணி, தீபாராதனை, பிரசாதம், இரவு 7:00 மணி. லட்சார்ச்சனை: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசிவீதி, மதுரை, காலை 8:00 மணி, விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: மாலை 5:00 மணி. திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. மார்கழி சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, இருபாவை ஓர் பார்வை தலைப்பில் சொற்பொழிவு: பேராசிரியர் சவுந்திரராஜன், தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. 72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி. சுவாமி சாரதானந்தர் ஜெயந்தி: நிகழ்த்துபவர் -- சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 6:30 மணி. திருப்பாவை: நிகழ்த்துபவர் -- முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி. திருப்பாவை: நிகழ்த்துபவர் - - ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி. திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி. நகர சங்கீர்த்தனம், கூட்டுப் பிரார்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, காலை 6:30 மணி முதல். பொது ராமகிருஷ்ணர், சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 33 வது மாநில மாநாடு: பாரதியார் மெட்ரிக் பள்ளி, எழுமலை, மூத்த துறவியரின் ஆன்மிக உரைகள், சிறப்பு பூஜைகள், பஜனை, கலை நிகழ்ச்சிகள், காலை 9:30 மணி முதல். ரமண மகரிஷி 146 வது ஜெயந்தி: சொக்கநாதர் திருமண மண்டபம், 397, வடக்குமாசி வீதி, மதுரை, இசை நிகழ்ச்சி: பாடுபவர் - - ஜெயா, ரத்னா, பாவனா, மிருதங்கம் - கோகுல்நாத், சொற்பொழிவு: ஓய்வு பெற்ற பேராசிரியர் கலாராணி, ஏற்பாடு: ரமணகேந்திரம், மாலை 6:30 மணி. குழந்தைகளுக்கான விளையாட்டு, யோகா, பஜனை உள்ளிட்ட குளிர்கால பயிற்சி முகாம்: சின்மயா மிஷன், 7 வது குறுக்குத்தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை. சுயவேலைவாய்ப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, பயிற்சி அளிப்பவர்: கல்வி அலுவலர் நடராஜன், தலைமை: செயலாளர் நந்தாராவ், மாலை 4:30 மணி. மகளிர் சேவை பண்பாட்டு பயிற்சி முகாம்:சுவாமி விவேகானந்தா வித்யா மந்திர், ஹார்விபட்டி, மதுரை, ஏற்பாடு:சேவாபாரதி, காலை 10:00 மணி முதல். தியாகி கக்கன் நினைவு அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமிராஜாதெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், பேசுபவர்: இயற்கை மருத்துவர் தேவதாஸ் காந்தி, மாலை 6:00 மணி. புதிய ஆதார் சேவா கேந்திரா மையம் திறப்பு விழா: திறந்து வைப்பவர்: மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ. பெங்களூரு மண்டல இயக்குனர் பவன் குமார் பாவா, ஆதார் சேவா கேந்திரா, ஜெய் சண்முகா காம்ப்ளக்ஸ், நம்பர் 10, விநாயகர் நகர், மேலுார் மெயின் ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 11:30 மணி. பள்ளி, கல்லுாரி அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, பொது சுகாதாரத்தில் புதுமைகள் சர்வதேச மாநாடு: யாதவா கல்லுாரி, மதுரை, மாநாடு ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு கூட்டம், காலை 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை, டெக்னிக்கல் அமர்வுகள், மதியம் 1:30 முதல் மாலை 4:30 மணி வரை. 'காண்பது யாவுமாய்' நுால் மதிப்புரை, கருத்தரங்கம்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: தமிழ்த் துறைத் தலைவர் காந்திதுரை, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மன்றம், காலை 11:40 மணி. தியாகராஜர் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம்: அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாதவூர், களப்பணி, காலை 8:00 மணி முதல், சுற்றுசூழலும், சமூக இயங்கியலும் சிறப்புரை: தாவரவியல் துறைத் தலைவர், மதியம் 12:00 மணி, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, மாலை 5:30 மணி, கலை நிகழ்ச்சிகள், இரவு 7:00 மணி. மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை. கண்காட்சி பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கண்காட்சி: சீமா டாடா யார்டு, கப்பலுார், ஏற்பாடு: சீமா டாடா, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு:மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை. விளையாட்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள்: பாண்டியன் சரஸ்வதி யாதவ பொறியியல் கல்லுாரி, மதுரை - சிவகங்கை ரோடு, காலை 7:00 மணி முதல்.