மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
02-Aug-2025
கோயில் 1008 விளக்கு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி. ஆடி கடைசி வெள்ளி சிறப்பு பூஜை: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், துவரிமான், காலை 8:00 மணி. ஆடி கடைசி வெள்ளி சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, துர்க்கா பரமேஸ்வரி, கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், உற்ஸவ அம்மனுக்கு பால் அபிஷேகம், காலை 9:00 மணி. விளக்கு பூஜை: ஸ்ரீமடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி, லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:30 மணி, பிரசாதம் வழங்குதல், ஏற்பாடு: காஞ்சி காமகோடி பீடம், இரவு 7:30 மணி. ஆடி உற்ஸவம்: ஆலமரத்தடி சுயம்புலிங்கம் அய்யனார் சுவாமி, முனியாண்டி சுவாமி கோயில், ஆத்திகுளம், மதுரை, புற்று நாகாம்பிகை கோயிலில் இருந்து சந்தனகுடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை 6:00 மணி, முளைப்பாரி, சக்தி கரகம் எடுத்தல், மாலை 6:00 மணி. ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு விசேஷ அபிஷேகம், சுவாமிக்கு ஆவேச ஆயுத காரி அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி. ஆண்டு உற்ஸவம் இருக்கன்குடி மாரியம்மன், முத்துக் கருப்பணசுவாமி கோயில், சொக்கலிங்கநகர், மதுரை, பால்குடம் எடுத்தல் காலை 6:00 மணி, சக்தி கரகம், அக்னிச்சட்டி எடுத்தல், இரவு 7:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி. விளக்கு பூஜை, நவசக்தி விநாயகர் கோயில், டீன் குடியிருப்பு, புதுநத்தம் ரோடு, மதுரை. மாலை 5:30 மணி. பக்தி சொற்பொழிவு குறள் கூறும் வளநாடு: நிகழ்த்துபவர் - சாமிநாதன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. பாகவத ஸ்ப்தாஹம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி, தீபாராதனை, பிரசாதம், மதியம் 1:00 மணி. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதா கல்யாண வைபவம்: நிகழ்த்துபவர் - கடையநல்லுார் பிரகாஷ் பாகவதர் குழு, நாமத்வார் பிராத்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி. சுதந்திர தின விழா பள்ளி, கல்லுாரி சேதுபதி மேல்நிலைப்பள்ளி, வடக்கு வெளி வீதி, மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி வாரியப் பள்ளிகள் செயலாளர் பார்த்தசாரதி, சிறப்பு விருந்தினர்கள்: வங்கி உதவி மேலாளர்கள் ஆர்த்தி, செல்வி ராஜேஸ்வரி, மதுரைக் கல்லுாரி வாரிய உறுப்பினர் இல அமுதன், காலை 8:30 மணி. மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எம்.எஸ்., ரோடு, மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி வாரியப் பள்ளிகள் தலைவர் சங்கரன், சிறப்பு விருந்தினர்கள்: கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம், காலை 8:00 மணி. மங்கையர்கரசி நடுநிலைப்பள்ளி, மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: முன்னாள் தாசில்தார் ஸ்ரீதர், ஏற்பாடு: முன்னாள் வைஸ்மென் கிளப் ஆளுநர் முத்துராஜூ, காலை 11:00 மணி. வடக்கு ஆவணி பொன்னு துவக்கப் பள்ளி, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை, தலைமை: தலைமையாசிரியை பிச்சம்மாள், காலை 8:15 மணிக்கு. என்.கே.குப்பய்யன் - ரத்னாமணி பள்ளிகள், கைத்தறி நகர், நிலையூர், நடுநிலைப்பள்ளியில் கொடியேற்றுபவர்: அரவிந்தன் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகி சாந்தாராம், துவக்கப் பள்ளியில் கொடியேற்றுபவர்: மதுரை இஸ்கான் கோயில் உறுப்பினர் சிவக்குமார், காலை 9:00 மணி. சாரதா சமிதி பள்ளி, சிம்மக்கல், மதுரை, தலைமை: கிராபி பேக்ஸ் இயக்குநர் அர்ஜூன், சிறப்பு விருந்தினர்: வழக்கறிஞர் முத்துராமலிங்கம், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், மாலை 4:30 மணி. சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளி, மதுரை, கொடியேற்றுபவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 8:00 மணி. மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, கொடியேற்றுபவர்: துணை மேயர் நாகராஜன், நலத்திட்ட உதவிகள் வழங்குபவர்: மைக்கேல் கல்வி நிறுவன தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், ஏற்பாடு: குறிஞ்சி மலர் அரிமா சங்கம், காலை 7:15 மணி. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி, உசிலம்பட்டி, தலைமை: முதல்வர் பால்ராஜ், சிறப்பு விருந்தினர்: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், காலை 8:00 மணி. ஜோதி நடுநிலைப்பள்ளி, சந்திராபாளையம், ஹார்விபட்டி, மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் மணிமாறன், ஏற்பாடு: திருநகர் டவுன் அரிமா சங்கம், காலை 8:30 மணி. அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, கொடியேற்றுபவர்: முதல்வர் பால் ஜெயகர், காலை 8:00 மணி. ஏ.பி.டி., துரைராஜ் துவக்கப் பள்ளி, மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு, மதுரை, தலைமை: செயலாளர் ரமேஷ்பாபு, கொடியேற்றுபவர்: முனிச்சாலை நாடார் உறவின்முறை தலைவர் அன்பரசன், காலை 8:00 மணி. எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, தலைமை: சபை தலைவர் பாஸ்கரன், கொடியேற்றுபவர்: தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய ஓய்வு பெற்ற நிர்வாக பொறியாளர் பாண்டியராஜன், காலை 9:30 மணி. எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, அழகர்கோவில், தலைமை: சபை தலைவர் பாஸ்கரன், கொடியேற்றுபவர்: மதுரா ஜூவல்லரி இயக்குநர் சிதம்பரம் ராஜேந்திரன், காலை 9:30 மணி. மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, மறவன்குளம், தலைமை: தாளாளர் சிங்காரவேல், கொடியேற்றுபவர்: முதல்வர் ஈஸ்டர் ஜோதி, காலை 8:00 மணி. எஸ்.பி.ஜே., மெட்ரிக் பள்ளி, அவனியாபுரம், தலைமை: செயலாளர் பழனிச்சாமி, கொடியேற்றுபவர்: மதுரை அரசு மருத்துவமனை சிறுநீரகவியல் துறை பேராசிரியர் ஜெகன் அருணாச்சலம், காலை 8:00 மணி. பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா, இடையபட்டி, மதுரை, காலை 9:00 மணி. ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளி, நாகமலை, தலைமை: தலைவர் கணேசன், சிறப்பு விருந்தினர்: அரசு வழக்கறிஞர் விஜயபாண்டியன், காலை 8:30 மணி. சுதந்திர தின விழா பொது மாவட்ட நிர்வாகம், ஆயுதப்படை மைதானம், மதுரை, கொடியேற்றுபவர்: கலெக்டர் பிரவீன் குமார், காலை 9:00 மணி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியேற்றுபவர்: நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காலை 8:45 மணி, ரத்த தான முகாம் துவக்கம், காலை 9:10 மணி. ரயில்வே காலனி, மதுரை, கொடியேற்றுபவர்: மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, காலை 9:00 மணி. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் ஜெகதீசன், காலை 8:30 மணி. வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, மதுரை, கொடியேற்றுபவர்: நிறுவனர் ரத்தினவேலு, காலை 9:00 மணி. மடீட்சியா, மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், கொடியேற்றுபவர்: மடீட்சியா அறக்கட்டளை தலைவர் அரவிந்த், காலை 8:15 மணி. தமிழ் இசைச் சங்கம், ராஜா முத்தையா மன்றம், மதுரை, தலைமை: சங்க அறங்காவலர் கிருஷ்ணன், கொடியேற்றுபவர்: மூத்த அறங்காவலர் மோகன்காந்தி, காலை 10:15 மணி. தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம், மதுரை, தலைமை: நகர் கிளைத் தலைவர் மாதவன், சிறப்பு விருந்தினர்: மாநில அமைப்புச் செயலாளர் யோகநாதன், காலை 7:30 மணி. சாந்தினி இல்லம், ராமகிருஷ்ணா காலனி, கைத்தறி நகர், மதுரை, தலைமை: பேரவைத் தலைவர் ராஜ்குமார், கொடியேற்றுபவர்: ஊராட்சி முன்னாள் தலைவர் பானுமதிகுமரன், ஏற்பாடு: தமிழக சவுராஷ்டிரா முன்னேற்றப் பேரவை, காலை 9:30 மணி. காந்தி மியூசியம், மதுரை, காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல், அஸ்தி பீடத்தில் மலர் அஞ்சலி, சர்வ சமயப் பிராத்தனை, தலைமை: செயலாளர் நந்தாராவ், கொடியேற்றுபவர்: பொருளாளர் செந்தில்குமார், காலை 9:30 மணி. சங்க அலுவலகம், பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, தலைமை: காந்தி காமராஜ் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன், கொடியேற்றுபவர்: தமிழக மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில தலைமை பொதுச் செயலாளர் செல்வராஜ், ஏற்பாடு: மாவட்ட ஜனதாதளம் கைத்தறி, காந்தி காமராஜ் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சங்கம், காலை 9:30 மணி. காமராஜர் சிலை, விளக்குத்துாண், மதுரை, தலைமை: நகர் தலைவர் ஜெயப்பிரகாசம், கொடியேற்றுபவர்: மாநில தலைமை பொதுச் செயலாளர் செல்வராஜ், அன்னதானம், ஏற்பாடு: மதுரை மதச்சார்பற்ற ஜனதாதளம், காலை 10:00 மணி. இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மக்கள் நல இயக்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இலவச பிரிவு அருகில், அண்ணாநகர், மதுரை, கொடியேற்றுபவர்: ஐசு அரிராம், காலை 9:00 மணி. மதுரை கால்நடைத்தீவன உற்பத்தி, விற்பனையாளர்கள் சங்கம், மாமுண்டி வாத்தியார் சந்து, கீழமாசி வீதி, மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் கந்தசாமி, காலை 11:00 மணி. அண்ணாபூங்கா, திருநகர், தலைமை: திருநகர் மக்கள் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, கொடியேற்றுபவர்: திருநகர் நடைப்பயிற்சி நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன், காலை 8:00 மணி. மதுரை வெற்றிலைப் பாக்கு பீடி சிகரெட் வர்த்தகர் சங்கம், மஞ்சணக்கார முத்தையா பிள்ளை தெரு, மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் திருப்பதி, காலை 9:00 மணி. நியூ எல்.ஐ.ஜி., காலனி குடியிருப்போர் நலவாழ்வு சங்கம், கே.கே.நகர், மதுரை, ஊர்வலம், காலை 7:30 மணி, கொடியேற்றம், காலை 8:00 மணி, கலை நிகழ்ச்சிகள், காலை 9:00 மணி. வெங்கடாஜலபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், துவரிமான், மதுரை, கொடியேற்றுபவர்: முன்னாள் பொருளாளர் கல்யாண வெங்கட்ராமன், பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல், தலைவர் ரமேஷ், காலை 8:00 மணி. சவுரப்பியா அப்பார்ட்மென்ட், சந்தானம் நகர், பைபாஸ் ரோடு, மதுரை, கொடியேற்றம், காலை 8:00 மணி. சென்ஸ் சூழல் அரங்கம், 2வது குறுக்குத் தெரு, கோமதிபுரம் முதல் மெயின் ரோடு, மதுரை, தலைமை: அபயம் டிரஸ்ட் நிறுவனர் இந்திராபதி, கொடியேற்றுபவர்: சென்ஸ் தலைவர் வெங்கடபதி, ஏற்பாடு: ஸ்ரீநாக்ஸ் என்விரோ, காலை 8:00 மணி. தாம்பிராஸ் எஸ்.எஸ்.காலனி டிரஸ்ட் திருமண மண்டபம், கொடியேற்றுபவர்: கணபதி நரசிம்மன், காலை 9:00 மணி. அசல் மலபார்பீடி மாளிகை, ஏர்போர்ட் ரோடு, அவனியாபுரம், மதுரை, தலைமை: தலைவர் மோகன், கொடியேற்றுபவர்: ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி., பாஸ்கரன், ஏற்பாடு: மதுரை நுகர்பொருள், ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம், காலை 8:30 மணி. பொது வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 48ம் ஆண்டு துவக்க நாள் விழா: ரயில்வே ஸ்டேஷன், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: பேராசிரியர் கதலி நரசிங்கப் பெருமாள், வைகை ராஜன், இல.அமுதன், காலை 6:00 மணி. கிராம சபைக் கூட்டம்: கொண்டையம்பட்டி, திருமால்நத்தம், அய்யன் தென்கரை, தண்டலை, நெடுங்குளம், டி.ஆண்டிப்பட்டி, வடுகப்பட்டி, குலமங்கலம், ஏற்பாடு: பாத்திமா கல்லுாரி, காலை 9:00 மணி. தெலுங்கு சமூகத்தினருக்கான சுயம்வர ஹோமம், விவாஹ கலந்துரையாடல்: கற்பகவேல் கல்யாண மண்டபம், ராஜா தெரு, சுப்பிரமணியபுரம், மதுரை, தலைமை: தலைவர்: வெங்கடசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் பத்மா வெங்கடேசன், ஏற்பாடு: தெலுங்கு பிராமண மஹாசபா, காலை 7:00 மணி. சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், மதியம் 12:00 மணி. மருத்துவம் பொது மருத்துவ முகாம்: அகர்வால் சபா, பி.பி.ரோடு, பாலரங்காபுரம், மதுரை, ஏற்பாடு: பி.ஜி.எம்., மருத்துவமனை, சிவன் ரத்த வங்கி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இலவச மருத்துவ முகாம்: சி.எஸ்.ஐ., நல்ல சமாரியன் சர்ச், தினமலர் அவென்யூ, பைபாஸ் ரோடு, மதுரை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. ரத்ததான முகாம்: குஜராத்தி சமாஜ், நேதாஜி ரோடு, மதுரை, தலைமை: தலைவர் யக்னேஷ் பட், துவக்கி வைப்பவர்: தங்கமயில் ஜூவல்லரி இணை இயக்குநர் ரமேஷ், தண்ணீர் தண்ணீர் அறக்கட்டளை இணை இயக்குநர் உச்சிமகாலிங்கம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ஆனந்த செல்வக்குமார், ஏற்பாடு: ஸ்ரீமதுரா குஜராத்தி சமாஜ், காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. கண்காட்சி கட்டட பொறியாளர் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மதுரை கட்டடப் பொறியாளர்கள் சங்கம், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி. ஓவியர் சதீஷின் கார்ட்டூன் வரையலாம் - ஓவியக் கண்காட்சி: லைக்கோ வகுப்பறை - 4, அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் விற்பனை, கண்காட்சி: ஹேன்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. கலாஷேத்ரா கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. வண்ண மலர்கள் கண்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. லெதர் காலணிகள் கண்காட்சி, விற்பனை: மடீட்சியா அரங்கம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீலெதர்ஸ் நிறுவனம், காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை. இந்தியா - பாகிஸ்தான் 'பிரிவினை கொடுமைகள்' குறித்து கண்காட்சி: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில், மதுரை, காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை.
02-Aug-2025