மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி - பிப்.14
14-Feb-2026
கோயில் கும்பாபிஷேகம்: பாண்டுரெங்கன் கோயில், ஹார்விபட்டி, யாகசாலையில் இருந்து விமானம், காலை 8:30 முதல் 9:30 மணிக்குள், அன்னதானம், காலை 10:35 மணி. சுவாமிக்கு கவச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி. மாசித் திருவிழாவை முன்னிட்டு பூக்குழி இறங்குதல்: திரவுபதை அம்மன் கோயில், திருவாதவூர், இரவு 10:00 மணி. சனிப்பெயர்ச்சி ஹோமம்: மாதா அமிர்தானந்தமயி மடம், பசுமலை, மதுரை, மாலை 6:00 மணி முதல். சனிப்பெயர்ச்சி விழா: திருமறைநாதர் கோயில், திருவாதவூர், காலை 8 :26 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி. பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - பாதே ஜெனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. சர்வசமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், ஷெனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: பழநியாண்டவர் கலை, கலாசார கல்லுாரி முன்னாள் பேராசிரியர் கந்தசாமி, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி . பள்ளி, கல்லுாரி உலக மகளிர் தின விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் பிரவீன் குமார், பங்கேற்பு: மதுரையில் உள்ள பெண்கள் கல்லுாரி முதல்வர்கள், ஏற்பாடு: பயோனியர் அறக்கட்டளை, மாவட்ட சமூக நலத்துறை, காலை 9:30 மணி. ஆண்டு விழா: வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி, திருப்பாலை, முன்னிலை: தாளாளர் துரைசாமி, முதல்வர் சுந்தராம்பாள், சிறப்பு விருந்தினர்: கல்வியாளர் அப்துல் காதிர், மாலை 6:00 மணி. மிஸ் பெஸ்ட்-26: தர்மலட்சுமி அரங்கம், சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, கல்லுாரிகளுக்கு இடையேயான கலைநிகழ்ச்சிகள், பங்கேற்பு: நடிகர் ஆர்.பி.யோகேஸ்வரன், கல்லுாரிச் செயலாளர் டி.வி.தர்மசிங், காலை 9:30 மணி. முதலீடு உத்திகள் குறித்து கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, முன்னிலை: செயலாளர் - தாளாளர் குமரேஷ், முதல்வர் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினர்: பீனிக்ஸ் இன்வெஸ்ட்மென்ட் சர்வீஸ் நிறுவனர் சுப்பிரமணியன், காலை 10:00 மணி பொது ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம்: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன் (ஓட்டல் தமிழ்நாடு யூனிட் 3), அழகர்கோவில் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: பத்திரிக்கை தகவல் அலுவலகம் (பி.ஐ.பி.,) தென்மண்டல தலைமை இயக்குநர் பழனிச்சாமி, மதுரை மண்டல தொழிலாளர் கமிஷனர் பிரவீன் பாண்டி மோகன்தாஸ், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை மண்டல அலுவலர் கோவிந்தசாமி, தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் இணை இயக்குநர் சந்தானம், காலை 10:30 மணி. விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோருக்கான நிதி உதவி, மானியங்கள், அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்: மடீட்சியா அரங்கம், மதுரை, ஏற்பாடு: பஞ்சாப் நேஷனல் வங்கி, மாலை 4:30 மணி.
14-Feb-2026