மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 27 க்குரியது
26-Jun-2026
ஜூன் 28 கோயில் * ஆனி ஊஞ்சல் உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நுாறு கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஊஞ்சலில் எழுந்தருளி பொன்னுாஞ்சல் பாடுதல், மாலை 6:00 மணி. * குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள். * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி. பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. * லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை வழங்குபவர்: சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி * பகவத்கீதை - விபூதி யோகம்: நிகழ்த்துபவர் - சுவாமி சிவயோகானந்தா, பிராமண கல்யாண மஹால், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட், மாலை 6:30 முதல் இரவு 7:45 மணி வரை. * ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி குணார்னவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. பொது * தினமலர் நாளிதழ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: சென்னை அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குநர் நாகராஜன், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை. * ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச போலியோ சொட்டு மருந்து முகாம்: தினமலர் அலுவலகம், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை, ஏற்பாடு: தினமலர் நாளிதழ், காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை. * பொது அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கம்: அரசு மருத்துவக் கல்லுாரி, மதுரை, தலைமை: ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கணேஷ், ஏற்பாடு: பொது அறுவை சிகிச்சை துறை, காலை 8:00 மணி. * சத்குரு சங்கீத சமாஜம் வழங்கும் இசை கச்சேரி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பாட்டு: தீபிகா, நந்திகா, வயலின்: ரவீந்திரன், மிருதங்கம்: தியாகராஜன், ஏற்பாடு: கவுரவ காரியதரிசிகள் ராஜாராம், வெங்கட்ட நாராயணன், மாலை 6:30 மணி. * இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை. * மாறுவோம் மாற்றுவோம் - தென்மாவட்ட சமூக ஆர்வலர்களின் ஆலோசனைக் கூட்டம்: எஸ்.பி.பி. திருமண மஹால், திருப்பரங்குன்றம், ஏற்பாடு: வீ த லீடர்ஸ் அமைப்பு, காலை 9:00 மணி. * குப்பை மேலாண்மைக்கான விழிப்புணர்வு நடை: எம்.ஜி.ஆர்., பாலம் முதல் அண்ணா தோப்பு வரை, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ஆண்டனி பால், தீபம் மகளிர் மேம்பாட்டு இயக்கம் மாவட்ட செயலாளர் ராதிகா, துவக்கி வைப்பவர்: துணை மேயர் நாகராஜன், ஏற்பாடு: அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், காலை 7:00 மணி. * ஆண்டு பொதுக்குழு கூட்டம்: யாதவர் பண்பாட்டுக் கழகம், 120 அடி ரோடு, மின்நகர், மதுரை, தலைமை: தலைவர் கண்ணன், காலை 10:00 மணி. * பேசுவோம் வளர்வோம் - பேச்சுக்கலை நிகழ்ச்சி: மதுரை திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைப்பு: சபை நாகரிகம், காலை 10:30 மணி, குன்றக்குடி அடிகளாரின் சிந்தனைகள் குறித்து சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - பேராசிரியர் திருவரசன், ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்விநல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை, மதியம் 12:15 மணி. * குழந்தைகளின் வாசிக்கும் திறனை அதிகரிக்கும் 'நுால் அரும்புகள்' நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 10:30 மணி, போக்சோ சட்ட விழிப்புணர்வு வழங்குபவர்: மதுரை சட்டக்கல்லுாரி பேராசிரியை சோனா, காலை 11:00 மணி. விளையாட்டு * கேலோ இந்தியா மாவட்ட வூஷு (தற்காப்பு கலை) மகளிர் லீக் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, தலைமை: தலைவர் பழனிக்குமார், பொதுச் செயலாளர் முத்துகுமார், சிறப்பு விருந்தினர்கள்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சிறப்பு டி.ஆர்.ஓ., சக்திவேல், தென்மண்டல மனித உரிமைகள் அமைப்பு பொதுச் செயலாளர் விஜய் ராகவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தமிழ்நாடு வூஷு அசோசியேஷன் பொதுச் செயலாளர் ஜான்சன், திண்டுக்கல் வூஷு அசோசியேஷன் செயலாளர் ஜாக்கி ஷங்கர், ஏற்பாடு: மாவட்ட வூஷு அசோசியேஷன், காலை 8:00 மணி முதல். மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை. கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை. * கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயர்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை. * மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. * உங்க வீடு உங்க சாய்ஸ் - அப்பார்ட்மென்ட் சேல் எக்ஸ்போ: ஓட்டல் ஜே.சி.ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: எனர்ஜி லிவிங்ஸ்கேப்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
26-Jun-2026