உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

கோயில் மாசி திருவிழா: அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்கு மாசி வீதி, மதுரை, அழகுநாட்டுதல் பச்சை வாழை பரப்புதல், காலை 6:00 மணி, திரு விளக்கு பூஜை, மாலை 6:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி. மகா சிவராத்திரி அன்னதானம்: காமாட்சி அம்மன் கோயில், முடுவார்பட்டி, அலங்காநல்லுார், மதுரை, அதிகாலை 5:00 மணி. பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. சிவனும் நானும்... சிவனுடன் சில நேரம்-தரிசனம்: சிவ சக்தி பவன், பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான நிலையம், நாகமலை புதுக்கோட்டை, காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. திருமந்திரம்: நிகழ்த்துபவர்- திருமாவளவன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயி்ல், மதுரை, இரவு 7:00 மணி. பொது மதுரை உற்பத்தி கவுன்சில்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, எனது யோசனை எனது இந்தியா தலைப்பில் மாணவர்களுக்கான போட்டி, தலைமை: உற்பத்தி கவுன்சில் தலைவர் ஜெகன்மோகன், சிறப்பு விருந்தினர்கள்: கல்லுாரி தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, செயலாளர் ஸ்ரீதர், காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை. ஈரநில தின கொண்டாட்டம்: சமாநாதம் ஏரி, திருப்பரங்குன்றம், மதுரை, பங்கேற்பவர்: ஏட்ரீஸ் அகஸ்தியமலை சமூக பாதுகாப்பு மைய இயற்கை கல்வியாளர் மரியா ஆண்டனி, ஏற்பாடு: அமெரிக்கன் கல்லுாரி இளநிலை, முதுகலை விலங்கியல் சங்கங்கள், காலை 6:30 மணி. எம்.எல்.ஏ., நிதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், அங்கன்வாடி திறப்பு விழா, அங்கன்வாடி பூமி பூஜை: ஊர்ெமச்சிகுளம், பரவை, மதுரை, திறந்து வைப்பவர்: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: நகர் அ.தி.மு.க., காலை 10:00 மணி. பள்ளி, கல்லுாரி கலாசாரங்கள் கடந்த பெண்களின் குரல்கள்- சர்வதேச மாநாடு: லேடி டோக் கல்லுாரி, மதுரை, தலைமையுரை: மகாகவி பாரதியின் கொள்ளுப் பேத்தி மீரா, பேசுவோர்: கொழும்பு பல்கலை ஆங்கிலத் துறை முதுநிலை உறுப்பினர் தினிதி கருணாநாயக்க, புதுச்சேரி பல்கலை முதுநிலை உறுப்பினர் மீனா, ஏற்பாடு: முதுகலை ஆங்கிலத் துறை, ஆராய்ச்சி மையம், பெண்கள் கல்வி மையம், காலை 10:00 மணி முதல் 4:00 மணி வரை. படிப்பை இடை நிறுத்திய குழந்தைகள் கணக்கெடுப்பு முகாம், தெருக்கள் சுத்தம் செய்தல்: வீரபாண்டி, மதுரை, பங்கேற்பு: மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த புஷ்பலெட்சுமி, தமிழ் உயராய்வு மைய துறைத்தலைவர் பரந்தாமன், காலை 7:00 முதல் மதியம் 2:30 மணி வரை. மாணவர்களின் கலை நிகழ்ச்சி, ஏற்பாடு: யாதவர் கல்லுாரி என்.என்.எஸ். பிரிவு, மாலை 6:00 மணி. கருத்தரங்கம்: யாதவர் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைப்பு: இந்திய சூழ்நிலையில் மனித உரிமைகள், ஜனநாயகம், நிகழ்த்துபவர்- பாத்திமா கல்லுாரி உதவிப் பேராசிரியர் விஜய சாந்தி, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சிறப்புரை: பார்க் பிளாசா ஓட்டல் குழும தலைவர் கண்ணன், ஏற்பாடு: மனித உரிமைகள் கழகம், மதியம் 12:00 மணி. பள்ளி மாணவர்களுக்கான புத்தக வாசிப்பு திருவிழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி, ஏற்பாடு: கல்லுாரி நூலகம், கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, காலை 10:30 மணி. மருத்துவம் அறுவை சிகிச்சை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர் கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை. கண்காட்சி ராஜஸ்தான் மேளா-பருத்தி, பட்டுக் கண்காட்சி: விஜயா மஹால், கே.கே.நகர், மதுரை, கண்காட்சி நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை