வணிக வாகனங்களுக்கும் ஆண்டு டோல் கட்டணம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
மதுரை: வணிக வாகனங்களுக்கும் ஆண்டு 'டோல்' கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் தெரிவித்ததாவது: ஆக. 15 முதல் கார், ஜீப், பயணிகள் வேன்கள் ஆண்டுக்கு 2000 முறை டோல்கேட்டை கடந்து செல்ல ரூ.3000 என்று நிர்ணயிக்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதேபோல வணிக வாகனங்களுக்கும் ஆண்டுக்கு என கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். வடமாநிலங்களில் இருந்து பயறு, பருப்பு வகைகளும் தென்பகுதியில் இருந்து கால்நடை தீவனம், தீப்பெட்டி, அத்தியாவசியப் பொருட்கள் வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல் லப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை சிறு, கனரக சரக்கு வாகனங்களே அதிகம் பயன்படுத்துகின்றன. பொதுமக்களுக்கான ஆண்டு கட்டணம் நிர்ணயித்ததைப் போல வணிக வாகனங்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும் என அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றனர்.