மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் பரணி வெள்ளி மாளிகை திறப்பு
28-Oct-2024
மதுரை; தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினை அழைத்ததாக சங்கத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: ''1924ல் மதுரையை தலைமையிடமாக கொண்டு தொழில் வர்த்தக சங்கம் துவக்கப்பட்டது. தற்போது இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது. தென் தமிழகத்திற்கு பல்வேறு கட்டமைப்புகளை பெற்றுத்தந்த சங்கம் நுாறாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. டிசம்பரில் நடக்கவுள்ள நிறைவு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம். விழாவில் பங்கேற்க வருவதாக தெரிவித்துள்ளார்'' என்றார். செயலாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர் தனுஷ்கோடி உடனிருந்தனர்.
28-Oct-2024