உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாரம்பரிய நடை பயணம்

பாரம்பரிய நடை பயணம்

மதுரை : மதுரை தானம் அறக்கட்டளை வளர்ச்சிக்கான சுற்றுலா மையம், இன்டாக்ட், டிராவல்ஸ் கிளப் சார்பில் இடைக்காட்டூரில் பாரம்பரிய நடை பயணம் நடந்தது. தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் கூறுகையில்,''2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊராக இடைக்காட்டூர் விளங்கியுள்ளது. பிற்கால பாண்டியர் சிவன் கோயில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் இருந்தன. சமண சமய தீர்த்தங்கரர் கோயில் இருந்து, பின் அழிந்தது. 1894ல் கட்டப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச் பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீம்ஸ் சர்ச் கட்டடப் பிரதியாக உள்ளது. பழமை வாய்ந்த பாசன ஏரியும் உள்ளது'' என்றார்.பங்கேற்றவர்களுக்கு இடைக்காட்டூர் குறித்த சிறப்பு கையேடு வழங்கப்பட்டது. டிராவல்ஸ் கிளப் தலைவர் ராஜகிரகம், அறக்கட்டளை நிர்வாகிகள் முருகையா, கார்த்திகேயன், முனிராம் சிங் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை