ஆவணிமூல வீதிகளில் போக்குவரத்து மாற்றம்
மதுரை: மீனாட்சி கோயில் வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த எல்லீஸ்நகர், வடக்கு ஆவண மூலவீதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஆகியவை உள்ளன. மேலும் வாகன நிறுத்தங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அறிந்து கொள்ள கோயிலைச் சுற்றியுள்ள வெளிவீதி, மாசிவீதி, மாரட்வீதி, ஆவணி மூலவீதிகளில் 20 க்கும் மேற்பட்ட முக்கிய சந்திப்புகளில் கியூ.ஆர்., கோடு மூலம் தகவல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக வடக்கு ஆவணி மூலவீதியில் உள்ள அடுக்கு மாடி வாகன காப்பகத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க அய்யப்பன் கோயில், முருகன் கோயில் சீசன் முடியும் வரை கீழ்க்கண்ட ஒரு வழிப்பாதை போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி வடக்கு ஆவணி மூலவீதி, மீனாட்சி காபிபார் சந்திப்பில் இருந்து தளவாய் தெரு, வடக்கு ஆவணி மூலவீதி சந்திப்பு வரை உள்ள சாலையில் பக்தர்கள் வாகனங்கள் உட்பட எந்த வாகனங்களும் செல்வதற்கோ, நிறுத்துவதற்கோ அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் வடக்கு ஆவணிமூலவீதி, நேதாஜி சிலை சந்திப்பு, மீனாட்சி பஸ்நிறுத்தம், தெற்கு ஆவணி மூலவீதி, பழைய ராஜ்மஹால் சந்திப்பு, கீழஆவணி மூலவீதி வழியாக வடக்குஆவணி மூலவீதிக்கு செல்ல வேண்டும்.அதேபோல தளவாய்த் தெரு, வடக்கு ஆவணி மூலவீதி சந்திப்பில் இருந்து மேற்கு ஆவணி மூலவீதிக்கு செல்லும் வழித்தடத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் மேலஆவணி மூலவீதி வடக்கு ஆவணி மூலவீதி சந்திப்பில் இருந்து வடுக காவல்கூடத் தெரு வழியாக செல்ல அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் மேலமாசி வீதி, நேதாஜி சலை மற்றும் நேதாஜி ரோடு வழியாக மேலமாசிவீதி, நேதாஜி சிலை மற்றும் நேதாஜி ரோடு வழியாக மேலமாசிவீதி சந்திப்பு சென்று செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.