உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேக மேம்பாடு காரணமாக ரயில்களின் நேரம் மாற்றம்

வேக மேம்பாடு காரணமாக ரயில்களின் நேரம் மாற்றம்

வேக மேம்பாடு காரணமாக குறிப்பிட்ட ரயில்கள் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஸ்டேஷன்களுக்கு வந்து செல்லும் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி, சென்னை சென்ட்ரல் - போடி ரயில் (20601) அதிகாலை 5:47க்கு திண்டுக்கல், காலை 6:40க்கு மதுரை, 7:28க்கு உசிலம்பட்டி, 7:48க்கு ஆண்டிப்பட்டி, 8:03க்கு தேனி வந்து செல்லும். போடிக்கு 15 நிமிடங்கள் முன்பாக காலை 8:55 மணிக்கு செல்லும்.மைசூரு - துாத்துக்குடி ரயில் (16236) காலை 6:03க்கு திண்டுக்கல், 7:25க்கு மதுரை, 8:18க்கு விருதுநகர், 8:38க்கு சாத்துார், 8:58க்கு கோவில்பட்டி, 9:18க்கு வாஞ்சி மணியாச்சி வந்து செல்லும். துாத்துக்குடிக்கு 20 நிமிடங்கள் முன்பாக காலை 10:15 மணிக்கு செல்லும்.சென்னை சென்ட்ரல் - பாலக்காடு ரயில் (22651) அதிகாலை 5:30க்கு திண்டுக்கல், காலை 6:01க்கு ஒட்டன்சத்திரம், 6:25க்கு பழநி, 7:35க்கு பொள்ளாச்சி வந்து செல்லும். பாலக்காடு சந்திப்பிற்கு 15 நிமிடங்கள் முன்பாக காலை 9:15 மணிக்கு செல்லும்.பொள்ளாச்சி - கோவை பாசஞ்சர் (56110) பத்து நிமிடம் முன்னதாக காலை 7:50க்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு8:13க்கு கிணத்துக்கடவு, 8:36க்கு போத்தனுார் வழியாக அரை மணி நேரம் முன்னதாக காலை 8:55க்கு கோவை செல்லும்.தாமதம்: பாலக்காடு டவுன் - கோவை மெமு ரயில் (66606) நிர்வாக காரணங்களால் 5 நிமிடம் தாமதமாக காலை 9:10 மணிக்கு கோவை செல்லும். மேற்கண்ட மாற்றம் ஜூலை 11 முதல் அமலுக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ