உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், வட்டார வேளாண் துறை அட்மா திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் சிறுகுறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் குறித்த பயிற்சி துணை வேளாண்மை அலுவலர் குமரப்பன் தலைமையில் நடந்தது. ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் ஐஸ்வர்யா, வேளாண் உதவி அலுவலர் ஆனந்தன், வேளாண் வணிகத் துறை மானிய திட்டங்கள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் விளை பொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டுக்கடன் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜோதிலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜேந்திரன், ராஜகோபாலன் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை