உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி

தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி

மதுரை : மதுரை விவசாய கல்லுாரி பூச்சியியல் துறை, இந்திய தேனீ வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.துறைத்தலைவர் சந்திரமணி வரவேற்றார். டீன் மகேந்திரன் துவங்கி வைத்தார். கொம்புத்தேனீ வளர்ப்பு தொழில்நுட்பத்தை இணைப்பேராசிரியர் சுரேஷ், கொசுத்தேனீ வளர்ப்பு குறித்து பேராசிரியர் ஜெயராஜ் விளக்கினர். தேனீப்பெட்டிகளை பராமரிக்கும் முறை குறித்து பேராசிரியர் சீனிவாசன், தேனீ விஷத்தை மருந்தாக பயன்படுத்துவது குறித்து பயிற்சியாளர் கிருபாகரன் பேசினர்.தொழில்முனைவோர் ஜோசப்பின், தானபதி தேனீ வளர்ப்பு அனுபவத்தை தெரிவித்தனர். மதுரை வேளாண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மைய முதன்மை செயலர் கணேசமூர்த்தி, விரிவாக்கத்துறை பேராசிரியர் வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் உஷாராணி பங்கேற்றனர். விவசாயிகள் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம், ராஜபாளையம் ஷமி தேனி வளர்ப்பகத்தில் அனுபவ பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை