உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தொடருது டிரான்ஸ்பார்மர் திருட்டு

 தொடருது டிரான்ஸ்பார்மர் திருட்டு

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி மின்வாரிய அலுவலக பகுதிக்குட்பட்ட நாட்டார்மங்கலம் கண்மாய், அய்யனார் கோயில் முன்புறத்தில் 63 கே.வி., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்தது. டிரான்ஸ்பார்மரில் இருந்து மேல், நடு நாட்டார் மங்கலத்திற்கு மின் சப்ளை செல்கிறது. கீழ் பகுதியில் டிரான்ஸ்பார்மரின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் பகுதியில் உள்ள மின் இணைப்பை இரவு நேரத்தில் துண்டித்தவர்கள் டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளி தாமிர கம்பிகள், இதர பாகங்களை திருடிச் சென்றனர். உதவிப் பொறியாளர் ஹரிஹரன் புகாரின் பேரில் கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் லோகநாதன் விசாரிக்கிறார். ஏற்கனவே 2026 ஜன. 20 கொட்டாம்பட்டி, பொட்டக்களம் பகுதியில் இதேபோல் டிரான்ஸ் பார்மர் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி