உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூங்காவில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

பூங்காவில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

மதுரை : யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி ஒத்தக்கடை பூங்காவில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது.ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாஸ்கரன் வரவேற்றார். உறுப்பினர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தென்னவன் மரங்களின் பயன்கள், சுற்றுச்சூழல் குறித்து பேசினார். பூங்கா நடைபாதையில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.20க்கும் மேற்பட்ட மரங்களுக்கு பராமரிப்பு பணியும், கவாத்து பணியும் நடந்தது. பவுண்டேஷன் ஆலோசகர்கள் சிலம்பம் மாஸ்டர் பாண்டி, உறுப்பினர்கள் ஸ்டெல்லா மேரி, கபிலன் சமூக ஆர்வலர் பாலமுருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை