மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு
26-Mar-2025
சோழவந்தான்:சோழவந்தான் அருகே தென்கரை கண்மாயில் இளம் மக்கள் இயக்கம் சார்பில் 8 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா துவங்கப்பட்டது. இளம் மக்கள் இயக்க நிறுவனர் சோழன் குபேந்திரன் தலைமை வகித்தார். பெண்கள் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க அமைப்பின் தலைவர் பாக்கியலட்சுமி துவக்கி வைத்தார். இயற்கை ஆர்வலர்கள் அரசு பள்ளி ஆசிரியர் ரூபி, பி.எஸ்.என்.எல்.,பொறியாளர் சத்யபிரியா, சமூக ஆர்வலர் மகேஸ்வரி, கிருஷ்ணா வேளாண் கல்லுாரி மாணவிகள் 50 மரக்கன்றுகளை நட்டனர். ஏற்பாடுகளை இயக்க உறுப்பினர்கள் ஸ்ரீராம், தாமோதரன் செய்திருந்தனர்.
26-Mar-2025