உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இந்திரா சௌந்தர்ராஜனுக்கு புகழஞ்சலி

இந்திரா சௌந்தர்ராஜனுக்கு புகழஞ்சலி

மதுரை : மதுரையில் மறைந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்கு உலக திருக்குறள் பேரவை, இலக்கிய அமைப்புகள் சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடந்தது. பேரவை தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். தமிழ்ப்பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை, செந்தமிழ்க்கல்லுாரி முன்னாள் முதல்வர் சின்னப்பா, காலேஜ் ஹவுஸ் நிர்வாகி கார்த்திகேயன், அனுஷனத்தின் அனுக்கிரகம் நெல்லை பாலு, புரட்சி பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன், வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், பேராசிரியர் நிர்மலா மோகன், திருவள்ளுவர் கழக செய லாளர் திருமாவளவன் ஆகியோர் இந்திரா சௌந்தர்ராஜனின் சிறப்புகள், எழுத்துகள் குறித்து பேசினர். அசோக்ராஜ் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ