உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  த.வெ.க., வினர் ஆர்ப்பாட்டம்

 த.வெ.க., வினர் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகர் முழுவதும் சாக்கடை கால்வாய்கள் சீரமைக்காமல் இருப்பது, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி, சந்தை திடலில் கடைகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேட்டை கண்டித்து த.வெ.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய்மகாலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., வினர் கைகோர்த்து டெண்டர் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எம்.எல்.ஏ., அய்யப்பன் அவரது அலுவலகத்திற்கு முன்னும், பின்னும் உள்ள கழிவுநீர் கால்வாய் 5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தும், சட்டசபையில் தி.மு.க., அரசை வாழ்த்தி பேசியது அவமானமாக இருப்பதாகவும் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை