த.வெ.க., பொதுக்கூட்டம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் நடிகர் விஜயின் த.வெ.க., சோழவந்தான் தொகுதி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்கள், மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடந்தது.மாநில ஒருங்கிணைப்பாளர் கல்லாணை தலைமை வகித்தார். நிர்வாகிகள் செல்வா, திலீபன், ஹரிஷ், வழக்கறிஞர் தியாகராஜன், ராஜேஷ்கண்ணா முன்னிலை வகித்தனர். ஆண்டனி வரவேற்றார்.பல்வேறு கட்சிகளில் இருந்து 200 பேர், புதிய உறுப்பினர்கள் 300 பேர் த.வெ.க.,வில் சேர்ந்தனர். சோழவந்தான் நகர் பொறுப்பாளர்கள் சுரேஷ் பாண்டியன், பாண்டி மாணிக்கம்,ராஜ், தனசேகர் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். வடக்கு மாவட்ட நிர்வாகி முனாப் ஒருங்கிணைத்தார். பசுமணியன் நன்றி கூறினார்.