உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  திறக்காத கழிப்பறையால் அவதி

 திறக்காத கழிப்பறையால் அவதி

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வது நிதிக்குழு மானியம் துாய்மை பாரத இயக்கம் 2023--24 திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. சுகாதார நிலையத்திற்கு தினமும் கர்ப்பிணிகள் உட்பட ஏராளமான மருத்துவ பயனாளிகள் வருகின்றனர். வளாகத்திற்குள்ளேயே கழிப்பறை இருந்தும் திறக்கப்படாததால் திறந்தவெளி பாதிக்கும் நிலை உள்ளது. மருத்துவ பயனாளிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ