உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குளியல் தொட்டியில் தண்ணீரின்றி அவதி

குளியல் தொட்டியில் தண்ணீரின்றி அவதி

சோழவந்தான்,: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில் தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமமடைகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் கூறியதாவது: கிராம மக்கள் இத்தொட்டியை மயானத்தில் இறுதி சடங்கு செய்வதற்கு பயன்படுத்தி வருகிறோம். இரண்டு மாதங்களாக மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் வரவில்லை. இதனால் இறப்பு நிகழ்வுகளின் போது இறுதி சடங்குகள் செய்ய வழியின்றி சிரமமாக உள்ளது.பழுது நீக்குவதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டாரை எடுத்துச் சென்றனர். இன்று வரை அதனை சரி செய்யவில்லை. இதுபற்றி பலமுறை ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தனர். நிதி பற்றாக்குறையால் தாமதமாவதாக ஊராட்சி தரப்பில் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பி.டி.ஒ கிருஷ்ணவேணி, ''விரைவில் சரி செய்யப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை