உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூதாட்டியிடம் திருட முயற்சி

மூதாட்டியிடம் திருட முயற்சி

சோழவந்தான்: சோழவந்தான் தெற்கு ரதவீதி ஆறுமுகத்தம்மாள் 70, வீட்டில் தனியாக வசிக்கிறார். நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் திருட வந்த மர்ம நபரைப் பார்த்து கூச்சலிட்டார். ஆத்திரமடைந்த மர்மநபர் மூதாட்டியின் கழுத்தை நெரித்து, வாயை பொத்தி தாக்கத் துவங்கினான். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே தப்பினான். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ