மஞ்சள் அறுவடை துவக்கம்
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பகுதியில் பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் கிழங்கு அறுவடை பணிகள் துவங்கி உள்ளது.பொங்கல் விழாவில் பானையில் மங்கலகரமாக மஞ்சள் கட்டுவது வழக்கம். இதற்கான மஞ்சள் கிழங்கு அலங்காநல்லுாரை அடுத்த அய்யூர், எர்ரம்பட்டி, கோணப்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் பயிரிடப்பட்ட மஞ்சள் செடிகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.விவசாயிகள் கூறுகையில், ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடையாகும் மஞ்சள் கொத்துகள், மதுரை மார்கெட் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கிறது. இதில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளதால் மருந்துகள் தயாரிப்பதுடன், உணவு மற்றும் அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கடந்தாண்டு ஒரு வேன் லோடு மஞ்சள் ரூ.30 ஆயிரத்திற்கு விற்றது. இந்தாண்டு ரூ.35 ஆயிரம் வரை எதிர்பார்கிறோம் என தெரிவித்தனர்.