உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டூ வீலர், லாரி மோதல்: பலி 1

டூ வீலர், லாரி மோதல்: பலி 1

பேரையூர்: பேரையூர் தாலுகா வண்டப்புலி அன்னக்கொடி 22, வரதராஜ் 20, மணிகண்டன் 20. இவர்கள் மங்கல்ரேவில் உள்ள ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை சம்பளம் வாங்குவதற்காக வண்டப்புலியிலிருந்து வரதராஜ் டூவீலரை ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். (ஹெல்மெட் அணியவில்லை) விராளம்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதி அன்னக்கொடி இருந்தார். வரதராஜ், மணிகண்டன் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். லாரி டிரைவர் மதுரை தனக்கன்குளம் ராஜாகண்ணன் 39, மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை