உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்டாங்கல் மலை முருகனை கண்டுகொள்வரா அதிகாரிகள் வசதி ஏற்படுத்தினால் சுற்றுலாத்தலமாகும்

உண்டாங்கல் மலை முருகனை கண்டுகொள்வரா அதிகாரிகள் வசதி ஏற்படுத்தினால் சுற்றுலாத்தலமாகும்

சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் உண்டாங்கல் மலை முருகன் கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விக்கிரமங்கலம் - செக்கானுாரணி ரோட்டில் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது உண்டாங்கல் மலை. இதன் கிழக்குப் பகுதியில் சமணர் படுகைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட புராதன சின்னங்கள் அமைந்து உள்ளன. இதனால் மலை முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்கு பகுதியில் பழமையான முருகன் கோயில் அமைந்துள்ளது. இதனை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதியினர் எதிர் பார்க்கின்றனர். சமூக ஆர்வலர் பால்பாண்டி கூறியதாவது: விக்கிரமங்கலம் பகுதி யில் பிரசித்தி பெற்றது இக்கோயில். கார்த்திகை தீபத்திருநாளன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வழிபாடு செய்து கிரிவலம் வருவர். தற்போது கோயிலுக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக சேதம் அடைந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது. படிக்கட்டு வசதி இல்லாமல் வழுக்குப் பாறைகளாக உள்ளது. பெண்கள், குழந்தைகள், முதியோர் சென்று வர சிரமப் படுகின்றனர். தொல்லியல் துறையினர் சமணர் படுகைகளுக்கு செல்ல படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். அதேபோல் கோயிலுக்கும் படிக்கட்டுகள், தெரு விளக்குகள், கிரிவலப்பாதை அமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, இப்பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை