உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பல்கலை மண்டல ஹாக்கி போட்டி

பல்கலை மண்டல ஹாக்கி போட்டி

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான மண்டல ஹாக்கி போட்டி கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் நடந்தது. நான்கு மண்டலங்களைச் சேர்ந்த கல்லுாரிகள் லீக் முறையில் பங்கேற்றன. அருளானந்தர் கல்லுாரி, சவுராஷ்டிரா கல்லுாரி மோதியதில் ஆட்டம் டிராவில் முடிந்தது. அமெரிக்கன் கல்லுாரி, சவுராஷ்டிரா கல்லுாரி மோதியதில் ஆட்டம் டிராவில் முடிந்தது. அருளானந்தர் கல்லுாரி 4 - 0 கோல் கணக்கில் அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லுாரியை வீழ்த்தியது. அமெரிக்கன் கல்லுாரி 6 - 1 கோல் கணக்கில் அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லுாரியை வீழ்த்தியது. சவுராஷ்டிரா கல்லுாரி 3 - 3 கோல் கணக்கில் அமெரிக்கன் கல்லுாரியை டிரா செய்தது. அருளானந்தர் கல்லுாரி 2 - 0 கோல் கணக்கில் அமெரிக்கன் கல்லுாரியை வீழ்த்தியது. சவுராஷ்டிரா கல்லுாரி 7 - 0 கோல் கணக்கில் அய்யநாடார் கல்லுாரியை வீழ்த்தியது. புள்ளிகள் அடிப்படையில் அருளானந்தர் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது. அதிபர் பேசில் சேவியர், முதல்வர் அன்பரசு, செயலாளர் ஆண்டனி சாமி, இணை முதல்வர் சுந்தர ராஜன், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜெயபாஸ்கரன் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ