தடுப்பூசி முகாம்
மதுரை: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்நாகமலை புதுக்கோட்டையில் ஆடுகளுக்கான ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் துவங்கியது. மதுரை மண்டல இணை இயக்குநர் நந்தகோபால் துவக்கி வைத்தார். மதுரை உதவி இயக்குநர் பழனிவேலு, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி டாக்டர்கள் வீரமணிகண்டன், வசந்த், திவ்யபாரதி, கால்நடை ஆய்வாளர் சக்திவேல், பராமரிப்பு உதவியாளர்கள் சிவக்குமார், முருகேசன் ஆகியோர் 700 ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.