உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வள்ளலார் ஜெயந்தி விழா

வள்ளலார் ஜெயந்தி விழா

சோழவந்தான் : சோழவந்தானில் சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலாரின் 201வது பிறந்தநாள் விழா நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நல்லுச்சாமி முன்னிலை வகித்தார். அருள் விளக்கு புஷ்பலதா, மணிகண்டன் ஏற்றினர். வள்ளலார் படத்துடன் ரத வீதிகளில் ஊர்வலம் சென்றனர். அகவல் படிக்கப்பட்டது. வள்ளலார் தலைப்பில் சந்திரசேகரன் பேசினார். சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இணைச் செயலாளர் நாகையா நன்றி கூறினார்.

வாடிப்பட்டி

குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் நிர்வாகி கோபிநாத் தலைமையில் விழா நடந்தது. திருவருட்பா பாடி சிறப்பு பூஜைகளை மிளகாய்பொடி சாமியார், உலக நல சத்திய ஞான சித்தாந்த சபை நிர்வாகி பாண்டி, கணேசன் செய்தனர். ஜோதிடர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். கோயில் நிர்வாகி ராஜேஸ்வரி அன்னதானம் வழங்கினார்.

திருப்பரங்குன்றம்

தொன்மை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் வள்ளலார் படத்திற்கு சுவாமி விவேகானந்தர் இளைஞர் பேரவை தலைவர் லட்சுமணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அறக்கட்டளை பொதுச் செயலாளர் மோகன்தாஸ் இனிப்பு, பொங்கல் வழங்கினார்.நிர்வாகிகள் சவுந்தரம், அக்பர்அலி, முருகன், சரவணன், சிவா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி