உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வள்ளலார் பிறந்த நாள்

வள்ளலார் பிறந்த நாள்

சோழவந்தான் : சோழவந்தானில் சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலாரின் 202 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். வள்ளலாரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஜோதி வழிபாடு நடந்தது. அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. சந்திரசேகரன் 'ஜீவகாருண்யம்' எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். மகளிர் அணி செயலர் சாந்தி, ஆலோசகர் மூர்த்தி, புஷ்பலதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை